Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kavin: ‘மாஸ்க்’ என டைட்டில் வைப்பதற்கு காரணம் இதுதான் – கவின் வெளிப்படையாக சொன்ன விஷயம்!

Kavin About Mask Movie Title Reason: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் கவின். வெற்றிமாறனின் தயாரிப்பில் இவர் மற்றும் ஆண்ட்ரியா இணைந்து நடித்துள்ள படம்தான் மாஸ்க். இப்படத்திற்கு மாஸ்க் என டைட்டில் வைத்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து கவின் ஓபனாக பேசியுள்ளார்.

Kavin: ‘மாஸ்க்’ என டைட்டில் வைப்பதற்கு காரணம் இதுதான் – கவின் வெளிப்படையாக சொன்ன விஷயம்!
மாஸ்க் திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 08 Nov 2025 21:46 PM IST

கோலிவுட் சினிமாவில் சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் கவின்  (Kavin Raj). இவரின் நடிப்பில் இறுதியாக கிஸ் (Kiss) என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்தை நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கியிருந்தார். இப்படம் கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் வெளியாகியிருந்தது. இதில் கவின் கல்லூரி மாணவனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமானது முற்றிலும் எமோஷனல், காதல் கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படமானது திரையரங்குகளில் அந்த அளவிற்கு வரவேற்புகள் கிடைக்கவில்லை, அனால் தற்போது ஓடிடியில் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. இந்த படத்தை அடுத்தாக கவினின் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் மாஸ்க் (Mask). இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) தயாரிக்க, இயக்குநர் விகர்ணன் அசோக் (Vikarnan Ashok) இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியாவும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த மாஸ்க் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் நிலையில், முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில், இந்த படத்திற்கு மாஸ்க் என டைட்டில் வைத்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து கவின் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ‘தங்கமே தளபதி.. பிளாஸ்ட்டு’.. பிளாஸ்ட்டு… ஜன நாயகன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது!

மாஸ்க் என டைட்டில் வைக்க காரணம் குறித்து கவின் பகிர்ந்த விஷயம்

இந்த மாஸ்க் படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் கவின் கலந்துகொண்டார். அப்போது அவர் அந்த நேர்காணலில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் தொடர்ந்து பேசிய அவர், மாஸ்க் என டைட்டில் வைக்க காரணம் என்ன என்பது குறித்து தெரிவித்துள்ளார். அதில் நடிகர் கவின், “இந்த டைட்டிலுடன் கதையும் நேரடியாக ஒரு தொடர்பு இருக்கிறது. இப்படம் ஒரு கொள்ளை சதித்திட்டத்தை அடிப்படையாக வைத்து நகரும் கதையில் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: நாளை மாலை மாஸ்க் படத்தின் ஆடியோ லாஞ்ச்… ஆண்ட்ரியா வெளியிட்ட பதிவு!

இப்படத்தில் எப்போது முகமூடி அணிந்து கொள்ளையடிக்கும் ஒரு குழுவையும், இந்த முழு கதையும் அந்த குழுவை சுற்றி நடக்கும் செயல்களையும் அடிப்படையாக கொண்டு இருக்கிறது. இந்த காரணத்தினால்தான் இப்படத்திற்கு மாஸ்க் என்ற டைட்டில் மிகவும் பொருத்தமாக இருக்கிறது” என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்க் திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து வெளியான பதிவு :

இந்த மாஸ்க் திரைப்படமானது ஓர் கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட உருவாகியுள்ளது. இந்த படமானது வரும் 2025 நவம்பர் 21ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் 2025 நவம்பர் 09ம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.