Dude Movie: ஓடிடியை தெரிவிக்கவிட காத்திருக்கும் பிரதீப் ரங்கநாதனின் டியூட்… எந்த ஓடிடியில்.. எப்போது பார்க்கலாம்?
Dude Movie Netflix Release : பிரபல இளம் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் 3வது வெளியான திரைப்படம்தான் டியூட். இப்படத்தை கீர்த்திஸ்வரன் இயக்கியிருந்த நிலையில், கடந்த 2025 அக்டோபர் 17ம் தேதியில் வெளியாகியிருந்தது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் வெளியான 2வது படம்தான் டியூட் (Dude). இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு இணையான வேடத்தில் நடிகை மமிதா பைஜூவும் (Mamitha Baiju) நடித்திருந்தார். இப்படத்தை அறிமுக இயக்குநரும், சுதா கொங்காராவின் உதவி இயக்குநருமான கீர்த்திஸ்வரன் (Keerthiswaran) இயக்கியிருந்தார். இவருக்கு இது முதல் படமாக இருந்தாலும், பிரம்மாண்ட இயக்குநரை போல படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தை தெலுங்கு பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசைஅயமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த திரைப்படமானது திரையரங்குகளில் வெளியாகி 4 வாரங்களான நிலையில், தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரதீப் மற்றும் மமிதாவின் இந்த டியூட் படமானது வரும் 2025 நவம்பர் 14ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருகிறது.




இதையும் படிங்க: ‘அனுபாமாவின் மார்பிங் போட்டோ லீக்’.. சிக்கிய தமிழகத்தை சேர்ந்த 20 வயது இளம் பெண்!
பிரதீப் ரங்கநாதனின் டியூட் பட ஓடிடி ரிலீஸ் குறித்தான அதிகாரப்பூர்வ பதிவு :
Orey oru Dude, oraayiram problems, zero solutions 🤭😭 pic.twitter.com/ShfAo36IJz
— Netflix India South (@Netflix_INSouth) November 10, 2025
பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூவின் காம்போ :
பிரதீப் ரங்கநாதனின் PR04 என்று இந்த படம் முதலில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இப்படமானது 3வது வெளியகியிருந்தது. இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்குள் முழுமையாக நிறைவடைந்து ரிலீசிற்கு தயாராகியிருந்தது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூவின் காம்போ முதல் முறையாக இணைந்திருந்தது.
இதையும் படிங்க: ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷன் படத்தின் டைட்டில் இதுதான் – அப்டேட் இதோ
இவர்கள் இருவரின் காம்போவும் இப்படத்தில் அருமையாகவே செட் ஆகியிருந்தது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ இருவரும் ஜோடியாக இல்லாவிட்டாலும், இவர்களுக்கிடையேயான எமோஷனல், காதல் மற்றும் காமெடி காட்சிகள் நல்லாவே வந்திருந்தது.
பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் :
டியூட் படத்தை அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இதில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, கௌரி ஜி கிஷன் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் 2025 டிசம்பர் 18ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை அடுத்ததாக தனது 5வது படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.