அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது – நடிகர் அஜித் குறித்து நெகிழ்ந்து பேசிய நடிகர் சூரி
Soori praised Ajith Kumar: தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் சூரி. இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இந்த நிலையில் நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்து உள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது வெற்றி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சூரி (Actor Soori). இவர் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் சூரியின் காமெடி ரசிகர்களிடையே தொடர்ந்து ஹிட் அடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து காமெடியனாக நடிகர் சூரி பல நூறு படங்களில் நடித்து வந்த நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் சூரி. அதன்படி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் ஒன்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் சூரி. இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
நாயகனாக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே அவரின் நடிப்பைப் பார்த்த ரசிகர்கள் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் முழு மனதுடன் அவரை நாயகனாக ஏற்றுக் கொண்டனர். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூரி தொடர்ந்து தமிழ் சினிமாவில் தற்போது நாயகனாக நடித்து வருகிறார். அதன்படி இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாமன் படமும் மாபெரும் வெற்றியை சம்பாதித்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது சூரி நாயகனாக நடித்து வரும் படம் மண்டாட்டி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.




நடிகர் அஜித் குறித்து நெகிழ்ந்து பேசிய நடிகர் சூரி:
தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் சூரி நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து உள்ளார். இதுகுறித்து ஒரு பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள சூரி புகைப்படத்தையும் பகிர்ந்து உள்ளார். அந்தப் பதிவில் நடிகர் சூரி கூறியுள்ளதாவது, அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது – உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல; அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது. அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது என்று தெரிவித்துள்ளார்.
Also Read… ரஜினி படத்தில் இருந்து விலகிய சுந்தர் சி – அடுத்த இயக்குநர் இவரா?
நடிகர் சூரி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது – உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல; அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது.
அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது… ❤️🤝🙏💐 pic.twitter.com/2PgBA1APi3— Actor Soori (@sooriofficial) November 13, 2025