Revolver Rita: ஆக்ஷன் நாயகியாக கீர்த்தி சுரேஷ்.. வெளியானது ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் ட்ரெய்லர்!
Revolver Rita Movie Trailer: தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நாயகியாக இருந்துவருபவர்தான் கீர்த்தி சுரேஷ். இவரின் முன்னணி நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் ரிவால்வர் ரீட்டா. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷின் (Keerthy Suresh) நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் எந்த படங்களும் வெளியாகவில்லை. இவர் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி படங்களில் பிசியாக இருந்துவந்தார். மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக தெலுங்கில் “உப்புக் காப்புறும்பு” (uppu kappurambu) என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமானது நேரடியாக ஓடிடியில் வெளியாகியிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக தொடர்ந்து தெலுங்கு மொழியில் கீர்த்தி சுரேஷ் படங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த படங்களுக்கு முன் இவர் தமிழில் நடித்திருந்த படம்தான் ரிவால்வர் ரீட்டா (Revolver Rita). இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆக்ஷன் நாயகியாக நடித்திருக்கும் நிலையில், இயக்குநர் ஜேகே சந்துரு (JK Chandru) இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் கீர்த்தி சுரேஷ் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படமானது கடந்த சில மாதங்களுக்கு முன்னே வெளியாகவேண்டியிருந்த நிலையில், சில காரணங்களால் பின் வாங்கியது. இதை தொடர்ந்து இப்படம் வரும் 2025 நவம்பர் 23ம் தேதியில் வெளியாகும் என உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அதை தொடர்ந்து இன்று 2025 நவம்பர் 13ம் தேதியில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் வெங்கட் பிரபு (Venkat Prabhu)இணைந்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.




இதையும் படிங்க: காந்தா படம் அவரின் பயோ பிக் இல்லை… ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்த துல்கர் சல்மான்!
இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்த ரிவால்வர் ரீட்டா படத்தின் ட்ரெய்லர் பதிவு :
Into the world of #RevolverRita 🔥#RevolverRitaTrailer
Tamil ▶️ https://t.co/hi03DxWcElTelugu ▶️ https://t.co/WRmLHbhZyS@KeerthyOfficial @Jagadishbliss @Sudhans2017 @realradikaa @dirchandru @PassionStudios_ @TheRoute @RSeanRoldan @dineshkrishnanb @Cinemainmygenes… pic.twitter.com/EkWX9ukKgT
— venkat prabhu (@vp_offl) November 13, 2025
இந்த ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் லீட் கதாநாயகியாக நடிக்க, அவருடன் முக்கிய வேடத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். மேலும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், சுனில், சூப்பர் சுப்பிராயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: தி கேர்ள்ஃபிரண்ட் படத்தின் சக்ஸஸ் மீட்.. ராஷ்மிகாவிற்கு முத்தம் கொடுத்த விஜய் தேவரகொண்டா!
இந்த படமானது இயக்குநர் ஜேகே சந்திருவிற்கு முதல் படம் என்றாலும், மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. மேலும் இப்படத்தை தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஸ் பழனிசாமி இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் வரும் 2025 நவம்பர் 23ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
கீர்த்தி சுரேஷின் புதிய படம் ;
கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் தொடர்ந்து புது படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார். அந்த வகையில் இவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ரௌடி ஜனார்தன் என்ற படத்தில் நடித்துவருகிறார். திருமணத்திற்கு பின் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழில் இயக்குநர் மிஷ்கினுடன் புதிய படம் ஒன்றில் நடித்துவருகிறார். மேலும் மலையாளத்தில் தோட்டம் என்ற படத்திலும் ஆக்ஷ்ன் வேடத்தில் இவர் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.