ரஜினியின் தலைவர்173 படத்தை சுந்தர் சி கைவிட என்ன காரணம்? ரசிகர்கள் கேள்விக்கு பதில் இதோ!
Rajinikanths Thalaivar173:இயக்குநர் சுந்தர் சி மற்றும் ரஜினிகாந்த் இயக்கத்தில் தமிழில் உருவாக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட படம் தலைவர்173. இப்படத்தின் அறிவிப்பின் பிறகு, சில நாட்களில் இப்படத்தை கைவிடுவதாக சுந்தர் சி அறிவித்திருந்தார். இதற்கு சரியான காரணம் எதுவும் அவர் கொடுக்கவில்லை, இப்படத்தை கைவிட காரணம் என்ன என்பது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடித்து, பான் இந்திய வரை சூப்பர் ஹிட் வெற்றிப் பெற்றவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக கூலி (Coolie) என்ற படம் வெளியானது. இதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியிருந்த நிலையில், மக்களிடையே விமர்சனம் ரீதியாக கலவையான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெளியீட்டை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் இவர் நடித்துவருகிறார். இந்த படமானது இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் உள்ள நிலையில் 2026ம் ஆண்டு வெளியாகவுள்ளது. இந்த படத்தை அடுத்தாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 173 (Thalaivar173) படத்தை சுந்தர் சி (Sundar C) இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவிருந்த நிலையில், பிரம்மாண்ட பட்ஜெட் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சுந்தர் சி இப்படத்தை இயக்கவில்லை என்று கடந்த 2025 நவம்பர் 13ம் தேதியில் அறிவித்திருந்தார். இது குறித்து சரியான காரணம் எதுவும் அவர் தெரிவிக்கவில்லை. இந்த கூட்டணி பிரிய என்ன காரணம் என்பது பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: நகைச்சுவை உணர்வுகொண்ட கீர்த்தி… ரிவால்வர் ரீட்டா பட ட்ரெய்லரைப் பாராட்டிய நானி!
சுந்தர் சி மற்றும் ரஜினிகாந்த் கூட்டணி படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட பதிவு :
காற்றாய் மழையாய் நதியாய்
பொழிவோம் மகிழ்வோம் வாழ்வோம்!ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் #Thalaivar173 #Pongal2027 @rajinikanth#SundarC#Mahendran@RKFI @turmericmediaTM pic.twitter.com/wBT5OAG4Au
— Kamal Haasan (@ikamalhaasan) November 5, 2025
தலைவர்173 திரைப்படத்தின் கூட்டணி பிரிய காரணம் என்ன :
இணையத்தில் வைரலாகும் தகவலின்படி, முதலில் சுந்தர் சி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தலைவர்173 திரைப்படத்தின் கதையை ஒரு திகில் நிறைந்த ஹாரர் கதைக்களத்தில் கூறியுள்ளார். ஆரம்பத்தில் இப்படத்தின் கதை இவருக்கு பிடித்திருந்த நிலையில், படத்தின் கதையை முழுமையாக்கிய பின் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்திற்கு இப்படத்தின் கதையில் சில தடுமாற்றம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அரசன் படத்தில் கவினுக்காக ஒரு கதாபாத்திரம் இருந்தது.. ஆனால் – வெற்றிமாறன் ஓபன் டாக்!
இதன் பின் இயக்குநர் சுந்தர் சி தானாகவே இந்த படத்தில் இருந்து வெளியேறுவதற்கு முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக குஷ்பூசுந்தர் இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு வெளியிட்டார். இது கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் அனுமதி இல்லாமல் வெளியானதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்தின் தலைவர்173 படத்தை அடுத்து இயக்கப்போவது யார் :
சுந்தர் சி இப்படத்தை விட்டு விலகிய நிலையில், இப்படத்தை அடுத்த இயக்குவது யார் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பரார்ஜ் அதிகம் இயக்க வாய்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை என பொறுத்திருந்து பார்க்கலாம்.