மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு – வெள்ளி வேல் காணிக்கை
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்த தமிழ்நாடு முதல்வர் விஜய் ஜூன் 12, 2026 இன்று தனி விமானம் மூலம் கர்நாடகா வந்தார். பின்னர் கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா, ஜூன் 12 : நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்த தமிழ்நாடு முதல்வர் விஜய் ஜூன் 12, 2026 இன்று தனி விமானம் மூலம் கர்நாடகா வந்தார். பின்னர் கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு நடத்தினார். முதல்வர் விஜய் 3 நாள் பயணமாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த ஜூன் 10, 2026 அன்று டெல்லி சென்றிருந்தார். அப்போது 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார்.
இதனையடுத்து டெல்லி பயணத்தை முடித்துவிட்டு ஜூன் 12, 2026 அன்று கர்நாடகா மாநிலம் மங்களூரு வந்தார். அங்கு புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வந்தடைந்தார். கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களை பார்த்து வணக்கம் தெரிவித்தார். இதனையடுத்து கோவில் வளாகத்தில் அர்ச்சகர்கள் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர்.




இதையும் படிக்க : “பொதுமக்களின் மனுக்கள் மீது 15 நாட்களில் முடிவு”.. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு!
மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு
VIDEO | Udupi, Karnataka: Tamil Nadu CM Vijay arrives at Kollur Mookambika Temple. pic.twitter.com/u7EHEnUPBy
— Press Trust of India (@PTI_News) June 12, 2026
பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்த முதல்வர் விஜய், கோவிலுக்கு 1 கிலோ 600 கிராம் எடையுள்ள வெள்ளி வாளை காணிக்கையாக அளித்ததாக கூறப்படுகிறது. முதல்வரின் வருகையை முன்னிட்டு அந்த பகுதியில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. முதல்வர் விஜய்யின் வருகையை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உடுப்பி மாவட்ட காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைசெய்திருந்தனர்.
மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜானகி ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழக முதல்வர்களாக வெற்றிபெற்ற தருணங்களில் கொல்லூர் மூகாம்பிகையை வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். அவர்கள் வழியில் தற்போதைய முதல்வர் விஜய்யும் மூகாம்பிகையை தரிசனம் செய்துள்ளது அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிக்க : தமிழக விவசாயிகளுக்கு வந்தது குட் நியூஸ்.. முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவிப்பு!!
கடந்த 1984 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த நிலையில், கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வந்து வழிபட்டார். அப்போது அம்மனுக்கு 1 கிலோ எடையுள்ள தங்க வாளை காணிக்கையாக வழங்கியுள்ளார். தற்போது முதல்வர் விஜய்யும் 1 கிலோ 600 கிராம் எடையுள்ள வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கியதாக வெளியான தகவல் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தமிழக அரசியலில் எம்ஜிஆர் பாணியை முதல்வர் விஜய் பின்பற்றுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.