AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அரசன் படத்திற்காக சிலம்பரசனிடம் கோரிக்கை வைத்த வெற்றிமாறன்? வைரலாகும் தகவல்

Arasan Movie Shooting Update | நடிகர் சிலம்பரசன் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து நடைப்பெற்று வரும் இந்த அரசன் படத்தின் ஷூட்டிங் தொடர்பான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அரசன் படத்திற்காக சிலம்பரசனிடம் கோரிக்கை வைத்த வெற்றிமாறன்? வைரலாகும் தகவல்
வெற்றிமாறன் - சிலம்பரசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Nov 2026 13:06 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன் (Silambarasan). இவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போதே இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் தனது ரசிகர்கள் பட்டாளத்தை பெரிதாக வைத்துள்ள நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அரசன். இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் எழுதி இயக்கி வருகிறார். கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த அரசன் படத்தின் ஷூட்டிங் ஒரு ஆண்டாக தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.

பொதுவாக வெற்றிமாறன் படம் என்றாலே அவர் ஷூட்டிங்கை முடிக்க தாமதம் ஆக்குவார் என்று சினிமா வட்டாரங்களில் ஒரு பேச்சு உள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக தற்போது அரசன் படத்தின் ஷூட்டிங் முடிவடையாமல் நீண்டு கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் தற்போது அரசன் படம் குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

அரசன் படத்திற்காக சிலம்பரசனிடம் கோரிக்கை வைத்த வெற்றிமாறன்?

அதன்படி சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, இந்தத் திரைப்படத்திற்காக சிம்பு ஏற்கனவே சுமார் 60 முதல் 70 நாட்களுக்கான கால்ஷீட்டை வழங்கியுள்ளார். வெற்றிமாறன் மேலும் 80 நாட்களுக்கான கூடுதல் கால்ஷீட்டைக் கேட்டுள்ளார். இன்னும் இரண்டு முக்கியமான காட்சிக் கோர்ப்புகளும் சில சிறிய காட்சிகளும் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளன. அவை முடிந்ததும் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடையும்.

அனிருத் மற்றும் அவரது குழுவினருக்கு, படமாக்கப்பட்ட காட்சிகளில் இருந்து தொகுக்கப்பட்ட 1 மணி நேரம் 15 நிமிடக் காட்சிகள் காட்டப்பட்டன. அவை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தன. இருப்பினும், வெற்றிமாறனிடம் ஏற்கனவே சுமார் 2 மணி நேர அளவிலான காட்சிகள் உள்ளன. முழு படப்பிடிப்பையும் முடித்த பின்னரே, காட்சிகளை முழுமையாகத் தொகுத்து, இறுதி வடிவம் எப்படி வந்துள்ளது என்பதை மதிப்பீடு செய்ய அவர் திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வைரலாகி வருகின்றது.

Also Read… வெற்றிகரமாக 4-வது வாரத்தில் நுழைந்த சூர்யாவின் சீன் படம் – படக்குழு வெளியிட்டுள்ள பதிவு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக் பாஸில் ரீ என்ட்ரி கொடுத்த பிரதீப் ஆண்டனி.. ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் ப்ரோமோ!

Follow Us