பிக் பாஸில் ரீ என்ட்ரி கொடுத்த பிரதீப் ஆண்டனி.. ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் ப்ரோமோ!
Bigg Boss Tamil 10 Promo: தமிழில் மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10. இந்த நிகழ்ச்சியில் இந்த வராம முழுக்க பேமிலி வீக்காக இருந்தது. அந்த விதத்தில் பிக் பாஸில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருந்த பிரதீப் ஆண்டனி, மீண்டும் பிக் பாஸில் நுழைந்துள்ளார். அது என்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்பட்டுவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026 செப்டம்பர் 6ம் தேதி முதல் ஆரம்பமான நிலையில், தற்போது 12வது வாரத்தின் முடிவில் உள்ளது. இந்த நிகழ்ச்சியானது கிட்டத்தட்ட 83 நாட்களை கடந்துள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் இறுதிக்கட்டத்தை எட்டிவிடும். இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளாராக இருந்து தொகுத்துவரும் நிலையில், சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த வீட்டில் இந்த வாரம் முழுக்க பேமிலி வீக்காக அமைந்திருந்தது. அந்த விதத்தில் இது நேற்று முடிவடைந்த நிலையில், அன்றே போட்டியாளர்களிடம் சண்டையும் வெடித்திருந்தது.
அந்த விதத்தில் பிக் பாஸ் சீசன் 7 போட்டியில் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட போட்டியாளராக இருந்தவர்தான் பிரதீப் ஆண்டனி (Actor Pradeep Antony). அவர் இன்று (28/11/2026) பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சிக்கும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: பிக்பாஸில் வெந்தது எது? வேகாதது எது? வைரலாகும் விஜய் சேதுபதியின் வீடியோ!
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் ரீ என்ட்ரி கொடுத்த பிரதீப் ஆண்டனி:
இந்த ப்ரோமோவில், பிரதீப் ஆண்டனி, சனம் ஷெட்டி மற்றும் சுமெஹா உள்ளிட்ட நடிகர்கள் நுழைந்துள்ளார். நடிகர் பிரதீப் ஆண்டனி மற்றும் சனம் ஷெட்டி ஏற்கனவே கடந்த பிக் பாஸ் சீசன்களில் போட்டியாளர்களாக கலந்துகொண்டிருந்தனர். அதிலும் பிரதீப் ஆண்டனி, 2024ம் ஆண்டில் வெளியான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தார்.
இதையும் படிங்க: வெற்றிகரமாக 4-வது வாரத்தில் நுழைந்த சூர்யாவின் சீன் படம் – படக்குழு வெளியிட்டுள்ள பதிவு!
பின் சக போட்டியாளர்கள் ரெட் கார்ட் கொடுத்த நிலையில், அவர் வெளியேற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். தனது நடிப்பில் உருவாகியுள்ள Mr & Mrs Office என்ற வெப் தொடரின் ப்ரோமோஷனுக்காக இவர்கள் அனைவரும் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் நுழைந்துள்ளார். தற்போது இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் Mr & Mrs Office வெப் சீரிஸ் குழு நுழைந்தது குறித்து வெளியிடப்பட்ட எக்ஸ் பதிவு:
Mr & Mrs Office குழுவினரின் வருகையால் களைகட்டும் Bigg Boss இல்லம்! 😍🔥
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில..
#BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision
— Vijay Television (@vijaytelevision) November 28, 2026
இந்த நிகழ்ச்சியானது தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது வெறும் 8 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த வாரத்தில் எவிக்ஷன் இருக்குமா? என்பது இன்னும் உறுதியாகவில்லை. சிலர் இந்த வாரத்தில் எவிக்ஷன் இருக்காது என கூறிவருகிறார்கள். என்ன நடக்கிறது என பொறுத்திருந்து காணலாம்.