AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மணிகண்டனின் மக்கள் காவலன் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்

Makkal Kaavalan Movie Trailer Release Update | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மணிகண்டன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள மக்கள் காவலன் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது என்பது குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

மணிகண்டனின் மக்கள் காவலன் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்
மக்கள் காவலன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Nov 2026 11:19 AM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மக்களிடையே வரவேற்பைப் பெறும் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மணிகண்டன் (Actor Manikandan). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் சாதரண மக்களின் வாழ்வியலை மையமகா வைத்து உருவாகி இருக்கும். அதுமட்டும் இன்றி இவரது நடிப்பில் வெளியான லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் ஆகியப் படங்கள் ரசிகர்களிடையே தங்களின் வாழ்க்கையை ஒத்துப் பார்த்துக்கொள்ளும் அளவிற்கு பல நிகழ்வுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இறுதியாக நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் எந்தப் படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் மணிகண்டனின் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் மக்கள் காவலன். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே தொடர்ந்து படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட்களும் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

மணிகண்டனின் மக்கள் காவலன் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?

அதன்படி இந்த மக்கள் காவலன் படத்தை சந்தோஷ் குமார் எழுதி இயக்கி உள்ள நிலையில் படத்தில் நடிகர் மணிகண்டன் உடன் இணைந்து நடிகர்கள் வாகை சந்திரசேகர், திவ்யா ஸ்ரீபாதா, ஏ வெங்கடேஷ், ஆர்.கே. விஜய்முருகன், சண்முகம் முத்துசாமி, சாபுமோன், உன்னிமய பிரசாத், ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி மற்றும் எசக்கி ரகு என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற டிசம்பர் மாதம் 04-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது என்பது குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படத்தின் ட்ரெய்லர் நாளை 30-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… தனது அடுத்தப் படம் குறித்து அப்டேட் கொடுத்த பேசில் ஜோசஃப் – வைரலாகும் வீடியோ

மக்கள் காவலன் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… லவ் பைட் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சந்தானம் – வைரலாகும் போஸ்ட்!

Follow Us