வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் முக்கிய மாற்றம்.. டிக்கெட் புக் செய்வதற்கு முன்பு தெரிந்துக்கொள்ளுங்கள்!
Vande Bharat Food Menu Changed | பொதுமக்கள் விரைவாக பயணம் செய்ய வந்தே பாரத் ரயில்களை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த நிலையில் தான், வந்தே பாரத் ரயில்களில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய பொதுமக்கள் மத்தியில் மிகவும் பரவாலக பயன்படுத்தப்படும் ஒரு போக்குவரத்து என்றால் அது ரயில்கள் தான். குறைந்த செலவில் அதிக தூரம் பயணம் செய்ய முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில், பொதுமக்களின் ரயில் பயணத்தை கூடுதல் விரைவானதாக மாற்றும் வகையில், மத்திய அரசு (Central Government Of India) வந்தே பாரத் ரயில்களை (Vande Bharat Trains) அறிமுகம் செய்தது. இந்தியா முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் தான், வந்தே பாரத் ரயில்களில் உள்ள நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை பயனர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த நிலையில், வந்தே பாரத் ரயில்களில் செய்யப்பட்டுள்ள மாற்றம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் முக்கிய மாற்றம்
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் உணவு வழங்கப்படுவது வழக்கம். முன்னதாக, வந்தே பாரத் ரயில்களில் ஒரு வேலைக்கு சுமார் 8 முதல் 10 வகை உணவுகல் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான், அவை வெறும் நான்காக குறைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட தகவலின்படி, பெங்களூரு வழித்தடத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில்களில் காலை உணவாக இட்லி மற்றும் வடையுடன் சாம்பார், சட்னி, அவல் உப்புமா அல்லது ரவை உப்புமா ஆகியவை வழங்கப்படுகின்றன.




இதையும் படிங்க : சுங்கச்சாவடிகளில் செல்லும்போது வாகன பதிவு எண்ணை மறைத்தால் 5 மடங்கு அபராதம்!
மதியம் மற்றும் இரவு உணவு
மதிய மற்றும் இரவு உணவுக்கு சப்பாத்தி, சாதம், பருப்பு ஆகியவற்றுடன் சைவம் அல்லது அசைவத்தின் ஏதேனும் ஒரு மெயின் டிஷ் வழங்கப்படுகிறது. அசைவம் என்றால் பெரும்பாலும் சிக்கன் வழங்கப்படுகிறது. ஆனால், இதற்கு முன்னதாக வந்தே பாரத் ரயில்களில் ஆம்லெட், சூப், மோர், சாண்ட்விச், சாக்லேட் உள்ளிட்ட பல விதமான உணவுகள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போது அவற்றின் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : Credit Card : கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்ட்ஸ் உண்மையாகவே பயனுள்ளதா?.. இதனை தெரிந்துக்கொள்ளுங்கள்!
நவம்பர் 1 முதல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மெனு
மதியம் மற்றும் இரவு நேரங்களில் காய்கறி, கூட்டு, தயிர், சாலட், ஊறுகாய் மற்றும் இனிப்பு வகைகளும் வழங்கப்பட்டன. ஆனால், தற்போது மெனுவில் இருந்து இந்த உணவு வகைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. நீண்ட நேரம் பயணம் செய்யும் பயணிகள் தங்களது உணவுகள் ஆறிப்போய் இருப்பதாக கூறியதை அடுத்து மெனுவில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டு நவம்பர் 01, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.