AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உலக நாடுகள் உடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் போட்ட இந்தியா.. ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு!

India's Free Trade Agreements | இந்தியா சில முக்கிய உலக நாடுகள் உடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் தான், இந்திய ஏற்றுமதியளர்களுக்கு இது குறித்து மத்திய வர்த்தக செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலக நாடுகள் உடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் போட்ட இந்தியா.. ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 29 Nov 2026 08:05 AM IST

புதுடெல்லி, நவம்பர் 29 : இங்கிலாந்து (England), நியூசிலாந்து (New Zealand), ஆஸிதிரேலியா (Australia) உள்ளிட்ட உலக நாடுகள் உடன் இந்தியா (India) தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை (Free Trade Agreement) மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் தான், இந்தியாவில் உள்ள ஏற்றுமதியாளர்கள் அந்த ஒப்பந்தங்களின் பலன்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு மத்திய அரசு (Central Government Of India) அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியா முக்கிய உலக நாடுகள் உடன் மேற்கொண்ட அந்த முக்கிய வர்த்தக ஒப்பந்தம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மத்திய வர்த்தக செயலாளர் சொன்ன முக்கிய விஷயங்கள்

இந்தியா முக்கிய உலக நாடுகள் உடன் மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தம் குறித்து, மத்திய வர்த்தக செயலாளர் சில முக்கிய விஷயங்களை கூறியுள்ளார். அது குறித்து அவர் கூறியுள்ளதாவது, இந்த தடையற்ற ஒப்பந்தங்கள் மூலம் சுமார் 70 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி கொண்ட உலக சந்தையை இந்தியா பயன்படுத்தும் வாய்ப்பு பெற்று இருக்கிறது. இது இந்தியாவில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : Credit Card : கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்ட்ஸ் உண்மையாகவே பயனுள்ளதா?.. இதனை தெரிந்துக்கொள்ளுங்கள்!

இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு அழைப்பு

இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், இந்திய ஏற்றுமதியாளர்கள் தடையற்ற ஒப்பந்தம் போடப்பட்டுள்ள பங்காளர் நாடுகளில் தங்கள் துறை சார்ந்த வாய்ப்புகளை அடையாளம் காண்பதற்காக சர்வதேச கண்காட்சிகளில் பங்கேற்பது, உலகளாவிய வினியோக சங்கிலிகளை உருவாக்குவது, எல்லை தாண்டி ஆன்லைன் வர்த்தக தளங்களை உருவாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதையும் படிங்க : டிசிஎஸ் வேலையை உதறிவிட்டு தொழில் தொடங்கிய பெண்.. மாதம் ரூ.3.5 லட்சம் வருமானம்!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி : அரசு தொடர் முயற்சிகள்

இந்தியாவின் பொருளாதார வளர்சிக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவாக பொருளாதார வளர்ச்சி பாதையில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது. சமீபத்தில் கூட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump), இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து பாராட்டி பேசியிருந்தார். இந்த நிலையில், உலக அளவில் வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு இந்த முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us