தங்க நகைக் கடன் வாங்குபவர்கள் செய்யும் தவறுகள்.. அறிக்கையில் சுட்டிக்காட்டிய CRIF!
Indian Gold Loan Mistakes | இந்தியாவில் பலரும் தங்க நகைகளை அடகு வைத்து அதன் மூலம் கடன் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் தான், தங்க நகைக் கடன் வாங்கும்போது இந்தியர்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள் குறித்து CRIF அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியர்கள் தங்களது கையில் கொஞ்சம் பணம் இருந்தாலும் அதில் தங்கம் (Gold) வாங்க வேண்டும் என நினைக்கின்றனர். அதற்கு காரணம், தங்கத்தால் கிடைக்கும் அந்தஸ்து மட்டுமல்ல. எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி தேவைகள், தங்கம் தரும் பொருளாதார பாதுகாப்பும் தான். பெரும்பாலான இந்தியர்கள் தங்களுக்கு பண தேவை ஏற்படும்போது வங்கிகளில் கடன் வாங்காமல், தங்களிடம் உள்ள தங்க நகைகளை அடகு வைத்து அதன் மூலம் கடன் பெறுவர்.
இது காலம் காலமாக இந்தியர்கள் மத்தியில் இருக்கும் பழக்கமாக உள்ளது. இந்த நிலையில் தான், தங்க நகைக் கடன் வாங்குமோது இந்தியர்கள் செய்யும் ஒருசில தவறுகள் குறித்து CRIF (Credit Rating Information Services) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தங்க நகைக் கடன் வாங்குபவர்கள் செய்யும் தவறுகள்
இந்தியாவில் தங்க நகைக் கடன் வாங்கும் பலரும் செய்யும் மிகப்பெரிய தவறு ஒன்று உள்ளது. அதாவது, அவர்கள் தங்க நகைக் கடனை வாங்கிய அடுத்த 6 மாதங்களுக்குள்ளாகவே மற்றொரு தங்க நகைக் கடனையும் வாங்கி விடுகின்றனர். தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்குவது அவசர பண தேவைகளை பூர்த்தி செய்தாலும், மீண்டும் மீண்டும் தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்குவது பெரிய நிதி சுமையை ஏற்படுத்தும் என அது கூறியுள்ளது.




இதையும் படிங்க : அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்திற்கு பிறகு தங்கம் விலை என்னவாகும்?.. இதுதான் நிலவரம்!
55 சதவீதம் மக்கள் உடனடியாக அடுத்த கடனை வாங்கியுள்ளனர்
இது தொடர்பாக CRIF வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கிய 55 சதவீதம் மக்கள் அடுத்த 6 மாதங்களுக்குள்ளாகவே அடுத்த தங்க நகைக் கடனை வாங்கியுள்ளனர். கூடுதலாக 9.4 சதவீதம் மக்கள் தங்க நகைக் கடன் மட்டுமில்லாமல் தனிநபர் கடன்களையும் வாங்கியுள்ளனர். மேலும் ஒரு 9.4 சதவீதம் மக்கள் நுகர்வோர் பொருட்களுக்கான கடன்களையும் வாங்கியுள்ளனர்.
இதையும் படிங்க : பிப்ரவரியில் அமலுக்கு வரும் இபிஎஃப்ஓ 3.0 அம்சம்?.. வெளியான முக்கிய தகவல்!
60.6 சதவீதம் வரை உயர்ந்துள்ள தங்க நகைக் கடன்
இந்தியாவில் நிலுவையில் உள்ள தங்க நகைக் கடன் மதிப்பு செப்டம்பர் மாத நிலவரப்படி, 2025 ஆம் ஆண்டை விவவும் சுமார் 60.6 சதவீதம் வரை உயர்ந்து ரூ.23.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருந்த ரூ.10.7 கோடி என்ற அளவை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.