AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிப்ரவரியில் அமலுக்கு வரும் இபிஎஃப்ஓ 3.0 அம்சம்?.. வெளியான முக்கிய தகவல்!

EPFO 3.0 Launch Update | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான், இபிஎஃப்ஓ 3.0 அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிப்ரவரியில் அமலுக்கு வரும் இபிஎஃப்ஓ 3.0 அம்சம்?.. வெளியான முக்கிய தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Nov 2026 11:26 AM IST

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) ஊழியர்களுக்காக பல்வேறு புதிய புதிய அம்சங்கள் மற்றும் சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஊழியர்கள் விரைவாகவும், எளிதாகவும் பிஎஃப் (PF – Provident Fund) பணத்தை எடுத்துக்கொள்ளும் வகையில் இபிஎஃப்ஓ 3.0 (EPFO 3.0) என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அம்சத்தின் மூலம் ஊழியர்கள் விரைவாகவும், எளிதாகவும் பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.

இந்த அம்சம் எப்போது முதல் அமலுக்கு வரும் என ஊழியர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான், அது தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரியில் அமலுக்கு வரும் இபிஎஃப்ஓ 3.0 அம்சம்?

ஊழியர்கள் எளிதாக தங்களது பிஎஃப் பணத்தை எடுக்க இபிஎஃப்ஓ பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தான், அந்த அமைப்பு மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றத்தை மேற்கொள்ள உள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது, இபிஎஃப்ஓ 3.0 அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது குறித்து 2027 பிப்ரவரி மாதம் சிபிடி (CBT – Central Board Of Trustees) நடத்த உள்ள கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.5,000 பென்ஷன்.. இந்த திட்டத்தில் இப்படி முதலீடு செய்யுங்கள்!

இபிஎஃப்ஓ 3.0 அம்சத்தின் கீழ் வரும் மாற்றங்கள்

இந்த இபிஎஃப்ஓ 3.0 அம்சத்தில் ஊழியர்கள் தங்களது பணத்தை யுபிஐ (UPI – Unified Payment Interface) மற்றும் ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மூலம் எடுத்துக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இபிஎஃப்ஓ இந்த அம்சத்தை தற்போது சோதனை செய்து வருகிறது.

இந்த இபிஎஃப்ஓ 3.0 அம்சத்தில் வரும் முக்கிய வசதி ஒன்று உள்ளது. அதுதான், SWP (Systematic Withdrawal Plan). அதாவது, இந்த அம்சத்தின் மூலம் ஓய்வு பெற்றவர்கள் தங்களது பிஎஃப் பணத்தை மாதம் மாதம், காலாண்டுக்கு ஒருமுறை, அறையாண்டுக்கு ஒருமுறை மற்றும் மொத்த பணத்தையும் ஒரே முறை எடுக்கும் அம்சங்கள் அமலுக்கு வர உள்ளன.

இதையும் படிங்க : கலப்படம் இல்லாத தங்கத்தை வாங்குவது எப்படி.. இவற்றை கட்டாயம் பின்பற்றுங்கள்!

தொடர்ந்து வட்டி வழங்கப்படும்

இதில் கவனிக்க வேண்டிய மிகவும் முக்கியமான அம்சம் ஒன்று உள்ளது. பிஎஃப் பணத்தை எடுக்கும் முறை மாற்றப்பட்டுள்ள நிலையில், பணத்தை எடுத்த பிறகு கணக்கில் மீதமுள்ள பணத்திற்கு தொடர்ந்து வட்டி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us