AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா.. பேனர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி.. திருவள்ளூரில் சோகம்..

திருவள்ளூர் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பேனர் வைக்கும்போது மின்கம்பியில் இரும்புக் கம்பம் உரசியதில் மின்சாரம் தாக்கி 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். மற்றொரு இளைஞர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா.. பேனர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி.. திருவள்ளூரில் சோகம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Nov 2026 11:23 AM IST

நவம்பர் 27, 2026: திமுக இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு இளைஞருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உதயநிதி ஸ்டாலினுக்கு பேனர் வைத்த 2 பேர் மின்சாரம் தாக்கி பலி

உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் வாணி சத்திரம் பகுதியில் திமுக நிர்வாகிகள் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைக்கும் பணி நடைபெற்றது. இதில் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த வீரவேந்தர் (22), காரணி கிராமத்தைச் சேர்ந்த வேலன் (30), வாணி சத்திரத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் (22) ஆகிய மூன்று இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பேனரை நிறுவுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பிகள் எதிர்பாராத விதமாக மேலே சென்றுகொண்டிருந்த மின்சாரக் கம்பியில் உரசியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரும்புக் கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்து, பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று இளைஞர்களும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.

மேலும் படிக்க: அம்பாசமுத்திரம்- பெருந்துறை தொகுதி இடைத்தேர்தல் தடை நீக்கம்.. 3 தொகுதிகளுக்கு தொடர்கிறது தடை!

இதில் பலத்த காயமடைந்த மூவரையும் அப்பகுதியினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மூவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வீரவேந்தர் மற்றும் வேலன் ஆகிய இரண்டு இளைஞர்களும் உயிரிழந்தனர். ஆல்பர்ட்டுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த இரண்டு இளைஞர்களும் அப்பகுதி திமுக ஒன்றியச் செயலாளர் தங்கம் முரளியின் உறவினர்கள் என்பது தெரியவந்துள்ளது.

பேனர் கலாச்சாரத்தால் தொடரும் உயிரிழப்புகள்

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேனர் வைக்கும்போது மின்சாரக் கம்பியில் இரும்புக் கம்பிகள் உரசியது எப்படி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள், தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் பொதுக்கூட்டங்களை முன்னிட்டு பேனர்கள், பிளக்ஸ் மற்றும் கொடிகள் வைக்கும் கலாச்சாரம் தொடர்ந்து வருகிறது. இதுபோன்ற பேனர்களை நிறுவும்போது மின்சாரக் கம்பிகள், போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பான அபாயங்கள் ஏற்படுகின்றன.

மேலும் படிக்க: பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. தாயுடன் இருந்த பெண்ணிடம் ஆபாச கிண்டல்.. சேலத்தில் மதுபோதை இளைஞருக்கு மரண அடி!

குறிப்பாக, முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் உயரமான இடங்களில் பேனர்கள் வைப்பது, இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்துவது போன்ற செயல்களால் மின்சாரம் தாக்கும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பேனர் வைப்பதற்கு உரிய அனுமதி பெறுவதுடன், மின்சாரப் பாதுகாப்பு விதிகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே பேனர் கலாச்சாரத்தால் தமிழகத்தில் பல்வேறு விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளுக்காக பேனர் வைக்கும்போது இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் மீண்டும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us