பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. தாயுடன் இருந்த பெண்ணிடம் ஆபாச கிண்டல்.. சேலத்தில் மதுபோதை இளைஞருக்கு மரண அடி!
Salem Crime : சேலம் மாவட்டத்தில் தாயுடன் பேருந்துக்காக காத்து க் கொண்டிருந்த பெண்ணிடம் மது போதையில் ஆபாசமாக பேசி பாலியல் ரீதியாக கிண்டல் செய்த இளஞரை பொது மக்கள் மரண அடி கொடுத்து ஓமலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் .
சேலம் மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில் தாயுடன் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் மதுபோதையில் பாலியல் ரீதியாக கிண்டல் செய்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். இதில், தாயுடன், பெண் ஒருவர் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென அந்தப் பெண்ணை பார்த்து பாலியல் ரீதியாக கிண்டல் செய்தார். இதனை, முதலில் கவனிக்காத அந்தப் பெண் அந்த இளைஞர் தொடர்ந்து ஆபாசமான வார்த்தைகளால் கிண்டல் செய்த நிலையில், அதைப் பார்த்து அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக, தனது தாயிடம் அந்தப் பெண் தெரிவித்த நிலையில் அச்சமடைந்து எதுவும் பேசாமல் இருந்துள்ளனர்.
மதுபோதையில் இருந்த இளைஞருக்கு தர்ம அடி
ஆனால், ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் அத்துமீறி பாலியல் ரீதியாக கிண்டல் செய்வதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றுகூடி அந்த இளைஞரை கண்டித்தனர். அப்போது, அந்த இளைஞர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனால், பொதுமக்கள் கண்டித்தும் அதனைக் கேட்காத அந்த இளைஞர் தொடர்ந்து ஆபாசமான வார்த்தைகளால் பாலியல் ரீதியாக கிண்டல் செய்த நிலையில், அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக ஓமலூர் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: கொலையில் முடிந்த குடும்ப தகராறு.. காதல் மனைவியை வெட்டி வீசிய கொடூர கணவன்.. ரத்தம் சொட்ட சொட்ட போலீசில் சரண்!
இளைஞரை ஓமலூர் போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்
அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணிடம் மது போதையில் ஆபாச வார்த்தைகளால் பாலியல் ரீதியாக அத்துமீறிய இளைஞரை அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர், சிகிச்சைக்காக ஓமலூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். சேலத்தில் பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் தாயுடன் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் மது போதையில் இளைஞர் பாலியல் ரீதியாக கேலி கிண்டல் செய்த சம்பவமும், அவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பு
தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு குற்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதற்கு அடிப்படை காரணமாக மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான், சேலத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் மது போதையில் இளைஞர் அத்துமீறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.