AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னை மேயர் பிரியாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ.. தவெகவினருக்கு மக்கள் பாடம் புகட்டும் நாள் தொலைவில் இல்லை.. திமுக மகளிரணி கடும் கண்டனம்!

DMK Women Wing : சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவை செயற்கை நுண்ணறிவு மூலமாக ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிடப்பட்டதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அது தொடர்பான முழு தகவலை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சென்னை மேயர் பிரியாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ.. தவெகவினருக்கு மக்கள் பாடம் புகட்டும் நாள் தொலைவில் இல்லை.. திமுக மகளிரணி கடும் கண்டனம்!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 27 Nov 2026 06:31 AM IST

சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியாவை செயற்கை நுண்ணறிவு மூலமாக ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்ட வீடியோவுக்கு திமுக மகளிர் அணி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படத்தின் இடம் பெற்றிருந்த பிந்தாஸ் பாடலில் செயற்கை நுண்ணறிவு மூலமாக மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி, முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா ஆகியோர் இருப்பது போலவும், மேயர் பிரியாவை ஆபாசமாக சித்தரித்து நடனம் ஆடுவது போலவும் சமூக வலைதளங்களின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, திமுக மகளிர் அணி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மகளிர் அணி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தவெகவினரின் வக்கிரமத்துக்கு சாட்சியான வீடியோ

தமிழக வெற்றி கழகத்தினரின் சிந்தனை எவ்வளவு ஆபாசமாகவும், வக்கிரமாகவும் நிறைந்துள்ளது என்பதற்கு இது ஒரு சாட்சி ஆகும். ஆன்லைன் அபியூசர்களால் நிறைந்த ஆபாச வெறி பிடித்த கும்பல்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி ஆகும். அந்த கட்சியின் எம்எல்ஏ முதல் உறுப்பினர்கள் வரை இவர்களைத் தேடிப் பிடித்து கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் முதல் அமைச்சர் ஜோசப் விஜய். தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்த மறைந்த தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான மு. கருணாநிதியை இழிவுபடுத்தும் தமிழக வெற்றி கழகத்தினரின் மலிவான புத்திக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

மேலும் படிக்க: உச்சநீதிமன்ற தீர்ப்பு மீறப்பட்ட விவகாரம்! தவெக ஆட்சியை கலைக்கனுமா? கொந்தளித்த சிபிஎம் மாநில செயலர் சண்முகம்!

தவெகவினருக்கு மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை

அதேபோல, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்து சமூகப் பணி ஆற்றி வரும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவை இழிவுபடுத்தும் ஆணாதிக்க ஜாதி வெறிக்கும், தமிழக மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அந்த கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களின் வைரலாக பரப்பப்பட்டு வரும் வீடியோவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சக்கர நாற்காலியில் வருவது போலவும், அவரை ஏராளமானோர் சுற்றி நின்று வரவேற்பது போலவும், அந்த கூட்டத்தின் நடுவே முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின், தற்போதைய முதல் அமைச்சர் ஜோசப் விஜய்.

செயற்கை நுண்ணறிவுக்கு கடும் கண்டனம்

திமுக துணை பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி ராஜாத்தி கருணாநிதி ஆகியோர் இருப்பது போலவும் இந்த வீடியோ காட்சியில் போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நடனம் ஆடுவது போன்றும் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளது கடும் கண்டனத்தை கிளப்பி உள்ளது.

மேலும் படிக்க: கொலையில் முடிந்த குடும்ப தகராறு.. காதல் மனைவியை வெட்டி வீசிய கொடூர கணவன்.. ரத்தம் சொட்ட சொட்ட போலீசில் சரண்!

Follow Us