AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காலையில் எழுந்ததும் 5 நிமிடம் இதைச் செய்யுங்க!

காலையில் தினமும் சில நிமிடங்கள் மூச்சுப் பயிற்சி செய்வது சுவாச முறையைச் சீராக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும். ஆழமான மூச்சுப் பயிற்சி, வயிற்று மூச்சுப் பயிற்சி, உதடுகளைக் குவித்து மூச்சை வெளியேற்றுதல் போன்ற எளிய பயிற்சிகளை வீட்டிலேயே செய்யலாம். தொடர்ந்து பயிற்சி செய்வதுடன், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

Sivasankari Bose
Sivasankari Bose | Published: 27 Nov 2026 07:00 AM IST
காலையில் எழுந்தவுடன் அமைதியான இடத்தில் நேராக அமர்ந்து ஆழமாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும். மூக்கின் வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, பின்னர் மெதுவாக வெளியே விட வேண்டும். இந்தப் பயிற்சி சுவாசத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும். தினமும் 2 முதல் 5 நிமிடங்கள் வரை இதனைப் பயிற்சி செய்யலாம்.

1 / 5
இந்தப் பயிற்சியில் மார்புப் பகுதியை விட வயிற்றுப் பகுதியின் அசைவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒரு கையை மார்பிலும் மற்றொரு கையை வயிற்றிலும் வைத்துக்கொண்டு பயிற்சியைத் தொடங்க வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும்போது வயிறு விரிவடையவும், வெளியே விடும்போது இயல்பாகச் சுருங்கவும் வேண்டும். இது உதரவிதானத்தின் செயல்பாட்டை உணர்ந்து சீரான சுவாச முறையைப் பழக உதவுகிறது.

2 / 5
முதலில் மூக்கின் வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பின்னர் மெழுகுவர்த்தியை ஊதுவது போல உதடுகளைக் குவித்துக்கொள்ள வேண்டும். உதடுகளின் வழியாக மெதுவாகவும் நீண்ட நேரமும் மூச்சை வெளியேற்ற வேண்டும். இந்தப் பயிற்சி சுவாசத்தைக் கட்டுப்படுத்தவும் மூச்சுத்திணறலைச் சமாளிக்கவும் உதவக்கூடும்.

3 / 5
இந்தப் பயிற்சியில் மூச்சை உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் நேரத்தைக் கணக்கிட வேண்டும். முதலில் நான்கு எண்ணிக்கைக்கு மூச்சை மெதுவாக உள்ளிழுக்க வேண்டும். பின்னர் ஆறு எண்ணிக்கைக்கு மூச்சை மெதுவாக வெளியேற்ற வேண்டும். இவ்வாறு சில நிமிடங்கள் தொடர்ந்து செய்வது மனதை அமைதிப்படுத்தவும் பதற்றத்தைக் குறைக்கவும் உதவும்.

4 / 5
மூச்சுப் பயிற்சிக்காகத் தனியாக அதிக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் அன்றாடச் செயல்களுடன் இதனை இணைக்கலாம். காலையில் பல் துலக்கிய பிறகு அல்லது நடைப்பயிற்சிக்கு முன்பு சில நிமிடங்கள் பயிற்சி செய்யலாம். வேலை தொடங்குவதற்கு முன்பும் மன அழுத்தம் ஏற்படும் நேரங்களிலும் மெதுவான சுவாசப் பயிற்சியை மேற்கொள்ளலாம். தினசரி சிறிய அளவில் தொடர்ந்து பயிற்சி செய்வது சீரான சுவாசப் பழக்கத்தை உருவாக்க உதவும்.

5 / 5
Follow Us