AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அம்பாசமுத்திரம்- பெருந்துறை தொகுதி இடைத்தேர்தல் தடை நீக்கம்.. 3 தொகுதிகளுக்கு தொடர்கிறது தடை!

Ambasamudram- Perundurai By Election : தமிழகத்தில்  அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை ஆகிய 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கான தடை தொடர்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அம்பாசமுத்திரம்- பெருந்துறை தொகுதி இடைத்தேர்தல் தடை நீக்கம்.. 3 தொகுதிகளுக்கு தொடர்கிறது தடை!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 27 Nov 2026 11:14 AM IST

தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில்  அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மற்ற 3 தொகுதிகளில்  இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடை தொடர்கிறது. தமிழகத்தில் திருச்சி கிழக்கு (ஜோசப் விஜய்), அம்பாசமுத்திரம் (இசக்கி சுப்பையா), பெருந்துறை (ஜெயக்குமார்), கரூர் (எம்.ஆர். விஜயபாஸ்கர்) மற்றும் விராலிமலை (சி.விஜயபாஸ்கர்) ஆகிய 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு எதிராக அந்தந்த தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் மற்றும் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்தனர்.  இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் விசாரணை அனைத்தும் முடிக்கப்பட்டு இருந்தது. இதற்கான தீர்ப்பு இன்று வெள்ளிக்கிழமை ( நவம்பர் 27- ஆம் தேதி) வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தல் தடை நீக்கம்

இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு எதிரான தடையை நீக்கி தேர்தல் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அத்துடன், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க மறுத்த நீதிமன்றம், இடைத்தேர்தல் நடத்துவதற்கு எதிரான தடை தொடர்வதாக தீர்ப்பளித்துள்ளது.

மேலும் படிக்க: டாஸ்மாக் பார் டெண்டரில் இனி இது தான் ரூல்ஸ்.. ஆயத்தீர்வைத் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

முதல்வர் விஜய்க்கு எதிரான வழக்கை நிராகரிக்க மறுப்பு

இதனால், அம்பாசமுத்திரம், பெருந்துறை மற்றும் அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த தவெக எம்எல்ஏ வி. எஸ். பாபுவின் கொளத்தூர் தொகுதி ஆகியவற்றில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே, முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைந்ததாகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை நிராகரிக்க கோரி முதல்வர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நீதிமன்றம் நிராகரிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

5 தொகுதிகள் தேர்தல் வழக்கின் பின்னணி

முன்னதாக, 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகளில், அரசியல் ஆதாயத்துக்காக தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து இருப்பதாகவும். இதனால், நடைபெற உள்ள இடைத் தேர்தலுக்கு பொதுமக்களின் வரிப்பணம் வீணாக செலவாக இருப்பதாகவும், அதற்கான பணத்தை எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தவர்களிடம் வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துக்களை தெரிவித்து வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

மேலும் படிக்க: சென்னை மேயர் பிரியாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ.. தவெகவினருக்கு மக்கள் பாடம் புகட்டும் நாள் தொலைவில் இல்லை.. திமுக மகளிரணி கடும் கண்டனம்!

Follow Us