தங்கம் விலை சரிவு: நகைக்கடன் வாங்கியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் வங்கிகள் – என்ன காரணம்?
Gold Loan Borrowers Under Pressure : தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது, புதிதாக தங்க நகை வாங்க விரும்புவோருக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், தங்கத்தை அடமானம் வைத்துக் கடன் வாங்கியவர்களுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் தற்போதைய மதிப்பு குறைந்துள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் நோட்டீஸ் அனுப்பி வருகின்றன.
தங்கம் விலை (Gold Rate) தொடர் சரிவில் இருப்பதால், நகைக் கடன் பெற்றவர்களுக்கு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் நோட்டீஸ் அனுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வாங்கிய கடன் தொகையை விட, அடகு வைத்த நகையின் மதிப்பு குறைந்ததால், கூடுதல் நகையை அடமானம் வைக்கவோ அல்லது கடன் தொகையில் ஒரு பகுதியை செலுத்தவோ அறிவுறுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான காரணம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தங்க நகை மீது கடன் வாங்கியவர்களுக்கு நோட்டீஸ்
தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது, புதிதாக தங்க நகை வாங்க விரும்புவோருக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், தங்கத்தை அடமானம் வைத்துக் கடன் வாங்கியவர்களுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் தற்போதைய மதிப்பு குறைந்துள்ளதால், கூடுதல் நகைகளை அடமானமாக வைக்குமாறோ, கடனின் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்துமாறோ, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளும் நகைக்கடன் நிறுவனங்களும் நோட்டீஸ் அனுப்பி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க : 2027ல் பெரிய பிளான் போடும் ஃபோன்பே.. ஐபிஓவில் வரப்போகும் முக்கிய அறிவிப்பு!




தங்கம் விலை 35 சதவிகிதம் வரை சரிவு
தங்கம் விலை கடந்த நவம்பர் 25, 2026 நேற்று நிலவரப்படி, 24 காரட் தங்கத்தின் சராசரி விலை கிராமுக்கு ரூ.12,458 முதல் ரூ.12,632 வரை இருந்தது. 2026 ஜனவரியில் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டிய நிலையில், இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளில் தங்கம் விலை சுமார் 30 முதல் 35 சதவிகிம் வரை சரிந்துள்ளது.
காரணம் என்ன?
நகைக்கடன் வழங்கும்போது, நகையின் மதிப்பில் 85 சதவிகிதம் சதவிகிதம் வரை கடனாக வழங்கலாம் என்பதை இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. இதுவே கடன் மதிப்பு விகிதம் எனப்படுகிறது. தங்கம் விலை சரிந்ததால், பலருக்கு அடமான நகையின் தற்போதைய மதிப்பு குறைந்து, அவர்கள் வாங்கிய கடன் தொகை இந்த வரம்பைத் தாண்டிவிட்டது. இந்த இடைவெளியைச் சரிசெய்யவே நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அணுகுகின்றன.
இதையும் படிக்க : தனியார் ஊழியர்களுக்கு இபிஎஃப்ஓ முக்கிய அறிவிப்பு.. இனி ஊழியர்களே பங்களிப்பு செலுத்தலாம்!
உதாரணமாக ஒருவர் ரூ.2,35,000 மதிப்புள்ள நகையை அடமானம் வைத்து, அதன் 85 சதவீதமான ரூ.2,00,000 கடன் பெற்றதாக வைத்துக்கொள்வோம். தங்கம் விலை 30 சதவிகிதம் அளவுக்கு சரிந்தால், அந்த நகையின் மதிப்பு சுமார் ரூ.1,64,500 ஆகக் குறையும். அந்த மதிப்பின் 85 சதவிகிதம் என்பது சுமார் ரூ.1,39,800 மட்டுமே இருக்கும். ஆனால் அவர் பெற்ற கடன் ரூ.2,00,000 என்பதால் மீதமுள்ள ரூ.60,000 பெற கூடுதல் நகையை அடமானம் வைக்கவோ, கடனின் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்தவோ நிதி நிறுவனம் கேட்கும். இதன் அடிப்படையிலேயே தங்க நகையை அடகு வைத்து கடன் வாங்கியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருவதாக தகலவ் வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் புதிதாக நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் தங்க நகை மீது கடன் பெற்ற மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.