Viral Video : அசுத்தமான யமுனா நதியில் குழந்தைகளை முழ்க வைத்த பெற்றோர்.. வைரல் வீடியோ!
Parents Bathing Babies in Toxic Foam | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில், நுரை மிகுந்த ஆற்றில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கால்களை நனைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும். இந்த வீடியோக்களில் சில ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாக, சில வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அசுத்தமான யமுனா நதியில் முழ்க வைப்பது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அசுத்தமான யமுனா நதியில் குழந்தைகளை முழ்க வைத்த பெற்றோர்
இந்தியாவில் நதிகள், ஆறுகள் என பல இயற்கை வலங்கள் இருக்கும். ஆனால், அவற்றை பொதுமக்கள் சுகாதாரமான முறையில் பராமரிப்பதில்லை. இதன் காரணமாக ஆறுகள், நதிகள் அனைத்தும் அசுத்தமாக உள்ளன. இவற்றின் மூலம் மனிதர்களின் உடல்நலமும், இயற்கை வலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு மாசு படிந்த ஆறுகள் மற்றும் நதிகள் தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தான், இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : மிஸ்ஸானால் பராமரிப்பாளர் கை காலி.. கோழியை பிடிக்க தாவிய முதலை
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், யமுனா நதி முழுவதும் வெள்ளை நிற போர்வை போர்த்தியதை போல நுரை மிகுந்து காணப்படுகிறது. அந்த நதி பார்ப்பதற்கு சோப்பு நுரை மிகுந்ததை போல காட்சியளிக்கிறது. அது மிகவும் அசுத்தமானதாக காணப்படுகிறது. ஆனால், அங்கிருந்த பொதுமக்கள் அதனை கண்டுக்கொள்ளாமல் அந்த ஆற்றில் குளிக்கின்றனர். அதுமட்டுமன்றி, கைக்குழந்தையை அவர்கள் நுரையில் கால் நனைக்க செய்கின்றனர். அப்போது அவர்கள் அதனை புகைப்படமும் எடுக்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோம் காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : அலுவலகத்தில் இருந்து கிரிக்கெட் பார்த்த இரண்டு ஊழியர்கள்.. கேமராவில் சிக்கியதும் செய்த செயல்!
கருத்துக்களை பகிர்ந்து வரும் பொதுமக்கள்
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து கவலைக்கொள்ளாமல் பெற்றோர்கள் அந்த குழந்தையில் கால்களை மிகவும் அசுத்தமான ஆற்றில் நனைக்கின்றனர் என பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.