AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா? உதயநிதி காட்டம்..

பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், யாரைத் திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்? காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை, அவரது காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா? பெரியார் – அண்ணாவைப் புறக்கணிக்கும் Reels முதலமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும், ஆணவத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்தப் பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என உதயநிதி தெரிவித்துள்ளார்.

காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?  காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா? உதயநிதி காட்டம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Sep 2026 16:28 PM IST

செப்டமபர் 14, 2026: தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் பிறந்த ஈரோடு மண்ணில் திராவிடர் கழகம் சார்பில் செப்டம்பர் 17ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கு அனுமதி மறுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். ஈரோட்டில் ஆண்டுதோறும் பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்படும். இந்தப் பேரணி திராவிடர் கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், 2026ஆம் ஆண்டு இந்தப் பேரணிக்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு இந்தப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முடிந்து குவியும் மக்கள்.. கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னைக்கு கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பெரியார் பேரணிக்கு அனுமதி மறுப்பு – உதயநிதி கண்டனம்:


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், இந்த Circus அரசின் காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?

முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டைச் செதுக்கிய பெரியார் – அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்?

பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், யாரைத் திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்? காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை, அவரது காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?

மேலும் படிக்க: முதல்வர் விஜய் – அஜித் பரிமாறிக்கொண்ட பரிசுகள்.. வெளியான புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..

பெரியார் – அண்ணாவைப் புறக்கணிக்கும் Reels முதலமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும், ஆணவத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்தப் பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Follow Us