முதல்வர் விஜய் – அஜித் பரிமாறிக்கொண்ட பரிசுகள்.. வெளியான புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..
CM Vijay - Ajith Gift: முதலமைச்சர் விஜய், நடிகர் அஜித்குமாருக்கு ரேசிங் கார் மாதிரியைப் பரிசாக அளித்துள்ளார். அதில், "பிரியமுடன் விஜய்" என கையெழுத்தும் போட்டுக் கொடுத்துள்ளார். அதேபோல, அஜித்குமார், முதலமைச்சர் விஜய்க்கு தான் அணிந்திருந்த தலைக்கவசத்தைப் பரிசாகக் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
செப்டம்பர் 14, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், நடிகரும் ரேசருமான அஜித்குமாருக்கு ரேஸ் கார் மாதிரியை பரிசளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகப் பரவி வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 10ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.
ஒரே இடத்தில் விஜய் – அஜித்:
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தய விழாவை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சர்வதேச அளவில் நடைபெற்ற லீ மான்ஸ் கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணியும் கடைசி சுற்றில் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: அநாகரிகமாக பேசும் திமுகவினரை மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்… தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!
நடிகர் அஜித்குமாரும் முதலமைச்சர் விஜயும் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்டது உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியது. நடிகர் அஜித்குமாரை சந்தித்த முதலமைச்சர் விஜய், ஓடிச் சென்று கட்டியணைத்து முத்தமிட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பரவின.
அதேபோல, விஜய், அஜித் இருவரையும் ஒரே இடத்தில் ஒன்றாகப் பார்த்த ரசிகர்கள், அப்பகுதியில் சூழ்ந்து அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தச் சூழலில், இருவரின் இந்தச் சந்திப்பு உலக அளவில் பெரும் பேசுபொருளாக மாறியது.
பரிமாறிக்கொண்ட பரிசுகள்:
Moments captured last Saturday ❤️✨
Memories to cherish forever! 📸 @CMOTamilnadu @Akracingoffl @SureshChandraa #AjithKumar #JosephVijay #AjithKumarRacing #AK pic.twitter.com/BGuX5bX5hO— Done Channel (@DoneChannel1) September 14, 2026
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய், நடிகர் அஜித்குமாருக்கு ரேசிங் கார் மாதிரியைப் பரிசாக அளித்துள்ளார். அதில், “பிரியமுடன் விஜய்” என கையெழுத்தும் போட்டுக் கொடுத்துள்ளார்.
அதேபோல, அஜித்குமார், முதலமைச்சர் விஜய்க்கு தான் அணிந்திருந்த தலைக்கவசத்தைப் பரிசாகக் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. பலரும் இதற்கு தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.