நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு முகாம்.. இகேஒய்சி மேற்கொள்ள சிறந்த வாய்ப்பு!
Ration Card Camp In Tamil Nadu | தமிழக அரசு அவ்வப்போது ரேஷன் கார்டு முகாம்களை நடத்தி வருகிறது. அந்த வகையில், நாளை (செப்டம்பர் 19, 2026) தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் முகாம் நடைபெற உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் அட்டை (Ration Card) திட்டம் அமலில் உள்ளது. இந்த ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்களுக்கு மாநிய விலையில் கோதுமை, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. எனவே, இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. இத்தகைய மிக முக்கிய அம்சமாக ரேஷன் அட்டை உள்ள நிலையில், அதன் மூலம் தொடர்ந்து பொருட்களை வாங்க வேண்டும் என்றால் இகேஒய்சி கட்டாயம் என அரசு கூறியுள்ளது. இந்த நிலையில், ரேஷன் கார்டு இகேஒய்சி மேற்கொள்வதற்கான முகாம்கள் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரேஷன் கார்டு முகாம்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு முகாம்கள்
ரேஷன் கார்டு தொடர்பான சேவைகளை பொதுமக்கள் மிக சுலபமாக பெற தமிழ்நாடு அரசு அவ்வப்போது, ரேஷன் கார்டு முகாம்களை நடத்தி வருகிறது. இந்த முகாம்கள் மூலம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், ரேஷன் அட்டையில் பெயர் திருத்தம், இகேஒய்சி ஆகியவற்றை மேற்கொள்ளலாம். தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013-ன் விதியின்படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் ரேஷன் அட்டைக்கு கேஒய்சி முடிப்பது கட்டாயம் ஆகும்.
இதையும் படிங்க : வீட்டுக் கடனில் இந்த சிறிய மாற்றத்தை செய்தால் போதும்.. பெரிய லாபம் பார்க்கலாம்!




அதாவது, இந்த ரேஷன் அட்டை வைத்திருக்கும் நபர்கள், அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரங்களை சரிப்பார்ப்பதற்காக கை விரல் ரேகை அடிப்படையிலான இகேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டு முதல் ரேஷன் கார்டு கேஒய்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 96.48 சதவீத ரேஷன் கார்டுகளுக்கு இகேஒய்சி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரேஷன் அட்டை பயனர்கள் தங்களது ரேஷன் கார்டுகளில் இகேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதையும் படிங்க : OTT, மியூச்சுவல் ஃபண்டுக்கு MDR கட்டணம் பொருந்துமா?.. விதிகள் கூறுவது என்ன?
அந்த வகையில் தான், தற்போது நாளை (செப்டம்பர் 19, 2026) தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில், ரேஷன் கார்டு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமின் மூலம் பயனர்கள் ரேஷன் கார்டு தொடர்பான சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.