Gold Price : திடீர் டிவிஸ்ட்.. சரசரவென உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன?
Gold and Silver Price In Chennai Today | தங்கம் மற்றும் வெள்ளி விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி அதிரடி விலை உயர்வை சந்தித்துள்ளது.
சென்னை, செப்டம்பர் 18 : செப்டம்பர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை (Gold Price) சிறிய அளவிலான விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று (செப்டம்பர் 18, 2026) தங்கம் மற்றும் வெள்ளி விலை (Silver Price) அதிரடி உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொடர் ஏற்ற, இறக்கங்களில் தங்கம் விலை – செப்டம்பர் நிலவரம்
செப்டம்பர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. உதாரணமாக, ஒரு நாள் உயர்வை சந்திக்கும் தங்கம் அடுத்த நாள் கடும் சரிவை சந்திக்கிறது. இவ்வாறு நிலையற்ற தன்மையை தங்கம் கொண்டு உள்ளது. இதுவரை சிறிய அளவிலான விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி, இன்று அதிரடி விலை உயர்வை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க : பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதி வரியை குறைத்த மத்திய அரசு.. விலையில் மாற்றம் ஏற்படுமா?
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,155-க்கும், சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,442-க்கும், ஒரு சவரன் ரூ.1,23,536-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : 20 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆக வேண்டுமா?.. இந்த சிம்பிள் ஃபார்முலா போதும்!
ஆண்டில் இறுதியில் தங்கம் விலை உயரும் – நிபுணர்கள்
2026 தொடங்கியது முதலே தங்கம் கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து நிலையற்ற தன்மையை கொண்டுள்ளது. இந்த நிலையில், தங்கத்தில் முதலீடு செய்யலாமா, வேண்டாமா என முதலீட்டாளர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில், தங்கம் இத்தனை நாட்களாக நிலையற்ற தன்மையை கொண்டு இருந்தாலும், ஆண்டில் இறுதியில் தங்கம் விலை மீண்டும் உயர்வை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.