AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இடைத்தேர்தல் செலவுக்கு பணம் வேண்டும்.. மக்களிடம் திரல் நிதி கேட்டு சீமான் வெளியிட்ட வீடியோ..

Seeman Video: இந்நிலையில், தேர்தல் செலவுகளுக்காக பொதுமக்களிடம் நிதி வழங்குமாறு சீமான் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளிலும், புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தேர்தல் தோல்விகளை நிரந்தரமானதாக கருதுவதில்லை என்றும், அவற்றை தற்காலிகமான பின்னடைவாக மட்டுமே பார்ப்பதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் செலவுக்கு பணம் வேண்டும்.. மக்களிடம் திரல் நிதி கேட்டு சீமான் வெளியிட்ட வீடியோ..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Sep 2026 10:10 AM IST

செப்டம்பர் 18, 2026: தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் செலவுகளுக்காக பொதுமக்கள் நிதியுதவி வழங்குமாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மதுராந்தகத்தில் கே.ஜானகிராமனும், தாராபுரத்தில் எம்.கார்த்திகாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதியிலும் நா.த.க. வேட்பாளர் போட்டியிடுகிறார்.

தேர்தல் செலவுக்கு நிதி வேண்டும் – வீடியோ வெளியிட்ட சீமான்:


இந்நிலையில், தேர்தல் செலவுகளுக்காக பொதுமக்களிடம் நிதி வழங்குமாறு சீமான் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளிலும், புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: “திமுகவிலேயே சேர்ந்து விடுகிறேன் என கூறியவர் துரை வைகோ!”.. கே.என்.நேரு அதிரடி விமர்சனம்!

மேலும், தேர்தல் தோல்விகளை நிரந்தரமானதாக கருதுவதில்லை என்றும், அவற்றை தற்காலிகமான பின்னடைவாக மட்டுமே பார்ப்பதாகவும் சீமான் தெரிவித்துள்ளார். எப்போதும் போல மக்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு இந்த முறையும் தனித்துப் போட்டியிடுவதாகவும், தேர்தல் களத்தில் நின்று உழைப்பதற்கான வலிமை தங்களுக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார வலிமை தான் ஒரே பின்னடைவு:

ஆனால், பொருளாதார வலிமை தங்களுக்கு உள்ள ஒரே பின்னடைவு எனக் குறிப்பிட்ட சீமான், ஒவ்வொரு முறையும் பொதுமக்கள் சிறுகச் சிறுக நிதிப் பங்களிப்பு வழங்கி கட்சியை வலுப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இந்த முறையும் பொதுமக்கள் தங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க: ஒரு பக்கம் ரூ.16 கோடி.. மறுபக்கம் ரூ.7,000 மட்டுமே!.. இடைத்தேர்தலில் மோதும் வேட்பாளர்களின் சொத்து விவரம் வெளியீடு!!

மேலும், மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து களத்தில் நின்று போராடுவோம் என்றும், தன் மீதும், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீதும் பல்வேறு வழக்குகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் இருப்பதாகவும் சீமான் தெரிவித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக வெயில், மழை, புயல் என அனைத்து சூழல்களிலும் மக்களுக்காக நின்று போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us