AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அச்சுறுத்தும் டெங்கு.. பாதிப்பு 16,577 ஆக உயர்வு.. சென்னையில் ஒரே நாளில் 87 பேருக்கு தொற்று!

Dengue Fever In Tamil Nadu: தமிழகத்தில் டெங்கு பரவலில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 87 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மலேரியா, சிக்குன்குனியா, எலி காய்ச்சல், H1N1 காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் காரணமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 156 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அச்சுறுத்தும் டெங்கு.. பாதிப்பு 16,577 ஆக உயர்வு.. சென்னையில் ஒரே நாளில் 87 பேருக்கு தொற்று!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Sep 2026 10:42 AM IST

செப்டம்பர் 18, 2026: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சராசரியாக தினமும் 200 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆண்டின் தொடக்கத்திலிருந்து செப்டம்பர் 17ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 16,577 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை டெங்கு பாதிப்பு காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு:

தமிழகத்தில் டெங்கு பரவலில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 87 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மலேரியா, சிக்குன்குனியா, எலி காய்ச்சல், H1N1 காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் காரணமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 156 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் படிக்க: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.. சொந்த வீடு வாங்க நினைப்போருக்கு அரிய வாய்ப்பு!

மாவட்ட வாரியான தரவுகளின்படி, சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது.

ஒரே நாளில் 1,320 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு:

தற்போது தமிழ்நாடு முழுவதும் பொதுவான காய்ச்சலால் ஒரே நாளில் 1,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொசு ஒழிப்புப் பணியாளர்கள் மாநிலம் முழுவதும் தீவிரத் தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: இடைத்தேர்தல் செலவுக்கு பணம் வேண்டும்.. மக்களிடம் திரல் நிதி கேட்டு சீமான் வெளியிட்ட வீடியோ..

டெங்கு காய்ச்சல் மற்றும் இதர பருவகால நோய் பாதிப்புகள் தொடர்பாக சுகாதாரத்துறை தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை வழங்கி வருகிறது. இருப்பினும், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் தமிழக சுகாதாரத்துறை மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு:

தமிழகத்தில் தொடர்ந்து டெங்கு பாதிப்பு அதிகரித்து வரக்கூடிய சூழலில், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை தரப்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதாவது, காய்ச்சல் தொடர்பான பாதிப்புகளுடன் வரக்கூடிய நபர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அதேபோல, டெங்கு தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதே சமயத்தில், பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும் அல்லது பொது இடங்களுக்கு, மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு பாதிப்பு தொடர்பான சிகிச்சை அளிப்பதற்கு தனி வார்டு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், கூடுதல் படுக்கை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்தச் சூழலில், தமிழகத்தில் டெங்கு பாதிப்பைத் தடுப்பதற்காக தமிழக அரசு தரப்பிலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Follow Us