AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஒரு பக்கம் ரூ.16 கோடி.. மறுபக்கம் ரூ.7,000 மட்டுமே!.. இடைத்தேர்தலில் மோதும் வேட்பாளர்களின் சொத்து விவரம் வெளியீடு!!

Candidates Asset Declaration Details: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்கும் பிரதான கட்சி வேட்பாளர்களின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா ரூ.16 கோடி சொத்துக்களுடன் கோடீஸ்வர வேட்பாளராக முதலிடத்தில் உள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணன் ரூ.7,000 மட்டுமே சொத்து உள்ளதாகத் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் ரூ.16 கோடி.. மறுபக்கம் ரூ.7,000 மட்டுமே!.. இடைத்தேர்தலில் மோதும் வேட்பாளர்களின் சொத்து விவரம் வெளியீடு!!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 18 Sep 2026 08:33 AM IST

செப்டம்பர், 18: தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து, வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளான தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்கள் மூலம் அவர்களின் சொத்து மதிப்புகள், நகை விவரங்கள், வாகனங்கள் மற்றும் கடன் விவரங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ரூ.16 கோடி சொத்துக்களுடன் தவெக வேட்பாளர் முதலிடத்தில் இருக்க, வெறும் ரூ.7,000 சொத்து மதிப்புடன் எளிமையான வேட்பாளராக கம்யூனிஸ்ட் வேட்பாளர் களம் காண்கிறார்.

இதையும் படிக்க: MLAக்களுக்கு கார் முதல் டிஎன்பிஎஸ்சி வரை.. 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்.. ஒரு மசோதாவுக்கு மட்டும் ‘செக்’.. காரணம் என்ன?

மதுராந்தகம் தொகுதி வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்:

மதுராந்தகம் இடைத்தேர்தலில் களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் மரகதம் குமரவேல் தனக்கு ரூ.1.65 கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதில் ரூ.79 லட்சம் அசையும் சொத்துக்களும், ரூ.86 லட்சம் அசையா சொத்துக்களும் அடங்கும். மேலும் 405 கிராம் தங்கம், 1.5 கிலோ வெள்ளி, ஹூண்டாய் i20 உட்பட 3 கார்கள் மற்றும் ரூ.11.8 லட்சம் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத் ரூ.1.78 கோடி அசையும் சொத்துக்களும், ரூ.3.83 கோடி அசையா சொத்துக்களும், 850 கிராம் தங்கம், 15 கிலோ வெள்ளி மற்றும் இன்னோவா கிரிஸ்டா கார் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதே தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமன் ரூ.82 லட்சம் அசையும் சொத்து, ரூ.81 லட்சம் அசையா சொத்து, 10 சவரன் தங்கம், 1 கிலோ வெள்ளி மற்றும் இன்னோவா கார் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சிபிஎம் வேட்பாளர் சுகந்தி ரூ.16.87 லட்சம் அசையும் சொத்துக்களும், 96 கிராம் தங்கமும் வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்; இவருக்கு அசையா சொத்துக்கள் எதுவுமில்லை. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் தனக்கு ரூ.5.67 லட்சம் அசையும் சொத்தும், ரூ.14 லட்சம் அசையா சொத்தும், ரூ.24 லட்சம் கடனும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தாராபுரம் தொகுதி வேட்பாளர்களின் சொத்து நிலவரம்:

தாராபுரம் தொகுதியைப் பொறுத்தவரை, தவெக வேட்பாளர் சத்தியபாமா ஒட்டுமொத்தமாக ரூ.16 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் மிகக் பணக்கார வேட்பாளராக முதலிடத்தில் உள்ளார். இவர் 500 கிராம் தங்கம், 1.7 கிலோ வெள்ளி, ஹூண்டாய் i10 கார், கையிருப்பாக ரூ.7.65 லட்சம் ரொக்கம், ரூ.84 லட்சம் அசையும் சொத்து மற்றும் ரூ.87 லட்சம் அசையா சொத்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர் பானுமதி 1.3 கிலோ தங்கம், எஸ்யூவி கார், ரூ.2.07 கோடி அசையும் சொத்து உட்பட ரூ.3.89 கோடி அசையா சொத்துக்கள் உள்ளதாகக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: “திமுகவிலேயே சேர்ந்து விடுகிறேன் என கூறியவர் துரை வைகோ!”.. கே.என்.நேரு அதிரடி விமர்சனம்!

திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யா 550 கிராம் தங்கம், ரூ.41.90 லட்சம் அசையும் சொத்து மற்றும் ரூ.2.50 லட்சம் அசையா சொத்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா 60 கிராம் தங்கம் மற்றும் ரூ.88 லட்சம் மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்களைக் கொண்டுள்ளார். இவர்களில் மிகவும் வித்தியாசமாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணன் தனக்கு அசையா சொத்துக்கள் ஏதுமில்லை என்றும், மாதச் சம்பளமாக ரூ.15,000 பெறுவதாகவும், வங்கிச் சேமிப்பு ₹2,000 உட்பட ஒட்டுமொத்த அசையும் சொத்து மதிப்பு வெறும் ரூ.7,000 மட்டுமே என்றும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்து எளிமையின் அடையாளமாகத் திகழ்கிறார்.

Follow Us