AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னையில் இரண்டாவது நாளாக உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 1,040 அதிகரிப்பு..

Gold Rate: செப்டம்பர் 19ஆம் தேதி நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.130 அதிகரித்து ரூ.14,280-க்கும், ஒரு சவரன் ரூ.1,040 அதிகரித்து ரூ.1,14,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,584-க்கும், ஒரு சவரன் ரூ.1,24,672-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இரண்டாவது நாளாக உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 1,040 அதிகரிப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Sep 2026 11:19 AM IST

செப்டம்பர் 19,2026: சென்னையில் தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், செப்டம்பர் 19ஆம் தேதியான இன்றும் சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.130 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு கிராமுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.14,150 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,13,200 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இரண்டாவது நாளாக தங்கம் விலை மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்:

செப்டம்பர் 19ஆம் தேதி நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.130 அதிகரித்து ரூ.14,280-க்கும், ஒரு சவரன் ரூ.1,040 அதிகரித்து ரூ.1,14,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,584-க்கும், ஒரு சவரன் ரூ.1,24,672-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: OTT, மியூச்சுவல் ஃபண்டுக்கு MDR கட்டணம் பொருந்துமா?.. விதிகள் கூறுவது என்ன?

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், செப்டம்பர் 10ஆம் தேதி முதல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழல், வாடிக்கையாளர்கள் மத்தியில் சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் மீது முதலீடு செய்யலாமா?

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை கடுமையான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, ஜூன் மாதம் தொடங்கி தங்கம் விலை சரசரவென குறைந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது. இதற்கு மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், உலகப் பொருளாதாரத்தில் நிலவும் நிலையற்ற தன்மை, கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

மேலும் படிக்க: வாடிக்கையாளர்கள் மீது மறைமுக MDR கட்டணம்?.. தீவிர நடவடிக்கை எடுக்க அரசு முடிவு!

அதேபோல், உலக முதலீட்டாளர்களின் கவனமும் கச்சா எண்ணெய் பக்கம் திரும்பியிருப்பதன் காரணமாக தங்கத்தின் மீதும் தாக்கம் இருந்து வருகிறது.

எனினும், இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை மீண்டும் உயரக்கூடும் என முதலீட்டாளர்கள் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, நகைப் பிரியர்கள் அல்லது தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் தற்போதைய சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு முதலீடு செய்வது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

Follow Us