வெறும் ரூ.100-ல் தொடங்கிய தொழில்.. ஆண்டுக்கு ரூ.2 கோடி வருமானம்.. சிறு தொழில் மூலம் சாதித்து காட்டிய இளவரசி!
Woman Built Company With 2 Crores Turn Over | சிறு தொழில் செய்து முன்னேற வேண்டும் என்பது சற்று சவாலான ஒன்றுதான். ஆனால், உசிலம்பட்டியை பூர்விகமாக கொண்ட பெண் ஒருவர் வெறும் ரூ.100 முதலீடு மூலம் ரூ.2 கோடி ஆண்டு வருமானம் ஈட்டும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்களுக்கு நிதி பாதுகாப்பே இருக்காது. அவர்கள் தங்களது குடும்பத்தையோ, கணவரையோ, பிள்ளைகளையோ தான் பண தேவைக்காக நம்பி இருப்பர். காரணம், பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்கு பிறகு வீட்டை பார்த்துக்கொள்வது, பிள்ளைகளை வளர்ப்பது என தங்களது காலத்தை கடத்துகின்றனர். இத்தகைய சூழலில் ஒருசில பெண்களால் மட்டுமே வேலைக்கு சென்றோ அல்லது தொழில் செய்தோ நிதி பாதுகாப்பை உருவாக்க முடிகிறது. அந்த வகையில், வெறும் ரூ.100 மூலம் தொழில் தொடங்கி, ரூ.2 கோடி வருமானம் ஈட்டி வருகிறார். இவர் தனக்கு ஏற்பட்ட சுமார் ரூ.50 லட்சம் கடனில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், யார் அந்த பெண், அவர் வெறும் ரூ.100 மூலம் தொழில் தொடங்கி சாதித்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வெறும் ரூ.100 மூலம் தொழில் தொடங்கி சாதித்த இளவரசி
உசிலம்பட்டியில் பிறந்தவர் இளவரசி. ஆனால், இவரது குடும்பம் கடந்த 45 ஆண்டுகளாக கேரளம் மாநிலம், திருச்சூரில் வசித்து வருகின்றனர். சிறு வயது முதலே தனது தாத்தா பாட்டி செய்யும் பலகாரங்களை ருசித்து வந்தவர் இளவரசி. அதுமட்டுமன்றி, அவர்கள் செய்யும் பலகாரங்களை தனது தெருவில், அக்கம் பக்கம் வீடுகளிலும் அவர் விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், திருமணம் செய்துக்கொண்ட இளவரசி, தானும் தனது குடும்ப தொழிலை தொடர வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க : OTT, மியூச்சுவல் ஃபண்டுக்கு MDR கட்டணம் பொருந்துமா?.. விதிகள் கூறுவது என்ன?
கடன் வாங்கி தொழில் செய்த இளவரசி
தனது ஆசைப்படியே அவர் 2010 ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு பேக்கரி தொடங்கியுள்ளார். அதற்காக கையில் இருந்த சேமிப்பு, கடன் என சுமார் ரூ.50 லட்சம் பணத்தை அவர் அந்த பேக்கரியில் போட்டுள்ளார். அவரது முயற்சிக்கு ஏற்ப அந்த பேக்கரியில் இருந்து நல்ல வருமானம் கிடைக்க தொடங்கியுள்ளது. நாளடைவில் 50 ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனமாக தனது பேக்கரியை இளவரசி உயர்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதி வரியை குறைத்த மத்திய அரசு.. விலையில் மாற்றம் ஏற்படுமா?
சறுக்கலில் இருந்து மீண்டெழுந்த இளவரசி
இளவரசியின் தொழில் சீராக சென்றுக்கொண்டு இருந்த நிலையில், திடீரென அவரது பேக்கரி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர் மொத்தத்தையும் இழந்துள்ளார். கடன் தொல்லை கழுத்தை நெறிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், மீண்டும் மனம் தளராமல் வெறும் ரூ.100 முதலீட்டில் திருச்சூர் ரயில் நிலையத்தில் சிப்ஸ் கடையை தொடங்கியுள்ளார். அந்த தொழிலும் அவருக்கு கைகொடுத்த நிலையில், தொழிலை மேலும் மேலும் வளர்ச்சி அடைய செய்து தற்போது ஆண்டுக்கு ரூ.2.14 கோடி வருமானம் ஈட்டும் நிறுவனத்தை அவர் உருவாக்கியுள்ளார்.