AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காமராஜர் காலை உணவு திட்டம் 2.0.. முதல்வர் தலைமையில் அதிரடி ஆலோசனைக் கூட்டம்.. ஆக்சனில் இறங்கிய ஜோசப் விஜய்!

Kamarajar Breakfast Scheme : தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

காமராஜர் காலை உணவு திட்டம் 2.0.. முதல்வர் தலைமையில் அதிரடி ஆலோசனைக் கூட்டம்.. ஆக்சனில் இறங்கிய ஜோசப் விஜய்!
முதல்வர் விஜய் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 18 Sep 2026 16:01 PM IST

தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 6- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல்வர் விஜய் தலைமை வகித்தார். இதில், தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், மாணவ, மாணவிகள் பசி இன்றி பள்ளிகளுக்கு வருவதை உறுதி செய்யவும், கல்வியில் முழு கவனம் செலுத்தவும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் தலைமையில் கடந்த ஜூலை 15- ஆம் தேதி நடைபெற்ற சமூக நலன், மகளிர் உரிமை துறை ஆய்வுக் கூட்டத்தில், காலை உணவு திட்டத்தை 8- ஆறாம் வகுப்பு வரை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

15 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர்

அதன்படி, இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம் சுமார் 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் கூடுதலாக பயன்பெற உள்ளனர். இதற்காக நிகழ் நிதி ஆண்டில் கூடுதலாக ரூ. 217 கோடியே 63 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த திட்டத்திற்கு ரூ. 724 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: களத்தில் இறங்கும் CM விஜய்!.. தவெக வேட்பாளர்களை ஆதரித்து செப்டம்பர் இறுதியில் தீவிர பிரச்சாரம் செய்ய திட்டம்!!

சமையல் அறை- சமையல் கூடங்கள் சுத்தமாக இருத்தல் வேண்டும்

இதன் மூலம், பெருநகர சென்னை மாநகராட்சியில் 447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பிலும், இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், அதனை ஒட்டிய பேரூராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் 2,150 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக நகராட்சி நிர்வாக இயக்குனராகத்தாலும்

காலை உணவு திட்டம் வருகிற 22- ஆம் தேதி விரிவாக்கம்

ஊரகப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளை ஒட்டி உள்ள பேரூராட்சி பகுதிகளில் உள்ள 12,857 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வாயிலாக சுய உதவி குழு உறுப்பினர்கள் மூலமாக காலை உணவு தயாரித்து வழங்கப்பட உள்ளது. வருகிற செப்டம்பர் 22- ஆம் தேதி இந்த திட்டத்தை முதல்வர் விஜய் சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார். இதில், சமையல் கூடங்கள், உணவு பரிமாறும் இடங்கள் ஆகியவை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நெருங்கும் இடைத்தேர்தல்.. அதிமுக நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி பெயர்கள் இல்லை..

Follow Us