Tamil Nadu weather : நாளை இந்த 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்
Tamil Nadu weather : தமிழகத்தில் செப்டம்பர் 19, 2026 நாளை 12 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னை, செப்டம்பர் 18 : தமிழகத்தில் செப்டம்பர் 19, 2026 நாளை நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நாளை இந்த 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், சுமார் 0.9 கிமீ உயரத்தில் மராத்வாடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மன்னார் வளைகுடா வரை, உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : மதுரையில் 11-ஆம் வகுப்பு மாணவர் மர்ம மரணம்.. ஆணவக் கொலை என பெற்றோர் குற்றச்சாட்டு.. சிபிசிஐடி விசாரணை கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!




இதன் காரணமாக செப்டம்பர் 18, 2026 இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், மதுரை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 19, 2026 நாளை நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
இதையும் படிக்க : களத்தில் இறங்கும் CM விஜய்!.. தவெக வேட்பாளர்களை ஆதரித்து செப்டம்பர் இறுதியில் தீவிர பிரச்சாரம் செய்ய திட்டம்!!
இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்பலத்த காற்றுடன்கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.