AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

களத்தில் இறங்கும் CM விஜய்!.. தவெக வேட்பாளர்களை ஆதரித்து செப்டம்பர் இறுதியில் தீவிர பிரச்சாரம் செய்ய திட்டம்!!

CM Vijay Campaign Strategy: தமிழகத்தில் அக்டோபர் 6-ல் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் விஜய் நேரடியாகப் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். ஐந்து முனைப் போட்டி நிலவும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் செப்டம்பர் இறுதியில் தலா 2 நாட்கள் தீவிரப் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக வெளியாகி உள்ள முக்கியத் தகவல்கள் குறித்த விரிவான செய்தித் தொகுப்பு.

களத்தில் இறங்கும் CM விஜய்!.. தவெக வேட்பாளர்களை ஆதரித்து செப்டம்பர் இறுதியில் தீவிர பிரச்சாரம் செய்ய திட்டம்!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 18 Sep 2026 12:16 PM IST

செப்டம்பர், 18: தமிழக அரசியல் களத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தல் களம் தற்போது பெரும் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் நேரடியாகப் பிரச்சாரக் களத்தில் இறங்க உள்ள செய்தி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஆளுங்கட்சியாகப் பொறுப்பேற்ற பிறகு தவெக சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் இது என்பதால், இந்தத் தேர்தல் வெற்றி அக்கட்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, செப்டம்பர் மாத இறுதியில் முதலமைச்சர் விஜய் நேரடியாகத் தொகுதிகளுக்குச் சென்று வாக்காளர்களைச் சந்தித்துப் பரப்புரை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ஒரு பக்கம் ரூ.16 கோடி.. மறுபக்கம் ரூ.7,000 மட்டுமே!.. இடைத்தேர்தலில் மோதும் வேட்பாளர்களின் சொத்து விவரம் வெளியீடு!!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நேரடிப் பிரச்சாரம்:

தமிழகத்தில் காலியாக அறிவிக்கப்பட்டுள்ள தனித் தொகுதிகளான தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் தவெக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் விஜய் வாக்கு சேகரிக்க உள்ளார். தாராபுரம் தொகுதியில் சத்யபாமா மற்றும் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் ஆகியோரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யவுள்ளார். ஏற்கனவே மதுராந்தகத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தின்போது, கட்சி நிர்வாகி ஆனந்த் அவர்கள் முதலமைச்சர் விரைவில் தொகுதிக்கு வருகை தருவார் எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது அதன் அட்டவணை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐந்து முனைப் போட்டியும் அரசியல் முக்கியத்துவமும்:

இடைத்தேர்தல் நடைபெறும் இந்த இரு தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான தவெக, எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் என ஐந்து முனைப் போட்டி நிலவுவது களம் மேலும் சூடுபிடிக்கக் காரணமாகியுள்ளது. முன்னதாக அதிமுக சார்பில் வெற்றி பெற்று, பின்னர் பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அதேவேளையில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் விலகிய நிலையில் உருவான புதிய மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியின் பலத்துடனும், முதலமைச்சர் விஜய்யின் நேரடித் தலையீட்டுடனும் களமிறங்கும் தவெக-வுக்கு இந்த இடைத்தேர்தல் மிகப்பெரிய அரசியல் சவாலாகவும் வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: MLAக்களுக்கு கார் முதல் டிஎன்பிஎஸ்சி வரை.. 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்.. ஒரு மசோதாவுக்கு மட்டும் ‘செக்’.. காரணம் என்ன?

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்:

பொதுத்தேர்தல்களின் போது குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பிரச்சாரம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் விஜய், இந்த இடைத்தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் தலா இரண்டு நாட்கள் தங்கித் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். தேர்தலை நெருங்கும் வேளையில் பரப்புரை மேற்கொள்வது வாக்காளர்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், செப்டம்பர் மாத இறுதியை இதற்காகத் தேர்வு செய்துள்ளனர். தாராபுரத்தில் 2 நாட்களும், மதுராந்தகத்தில் 2 நாட்களும் என மொத்தம் 4 நாட்கள் நடைபெறவுள்ள இந்தச் சூறாவளிப் பிரச்சாரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேதிகளுடன் விரைவில் வெளியாகவுள்ளது.

Follow Us