AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதல்வர் மருந்தகத்தில் இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து – விசாரணையில் பரபரப்பு தகவல்

Woman Staffer Stabbed : கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் காதலிக்க மறுத்ததால் முதல்வர் மருந்தகத்தில் வேலை பார்க்கும் மகளை கத்தியால் குத்தியதாக கைதான சந்தோஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். முதல்வர் மருந்தகத்தில் பணியில் இருந்த பெண்ணை கத்தியால் குத்திய சந்தோஷை அங்கிருந்த பொதுமக்களே பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

முதல்வர் மருந்தகத்தில் இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து – விசாரணையில் பரபரப்பு தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 Sep 2026 16:07 PM IST

கடலூர், செப்டம்பர் 18 : கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் காதலிக்க மறுத்ததால் முதல்வர் மருந்தகத்தில் வேலை பார்க்கும் மகளை கத்தியால் குத்தியதாக கைதான சந்தோஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். முதல்வர் மருந்தகத்தில் பணியில் இருந்த பெண்ணை கத்தியால் குத்திய சந்தோஷை அங்கிருந்த பொதுமக்களே பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த பெண்ணை மீட்ட காவல்துறையினர் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

முதல்வர் மருந்தகத்தில் இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் இளம் பெண் ஒருவர் ஊழியராக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் செப்டம்பர் 18, 2026 இன்று வழக்கம்போல் மருந்தகத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த சந்தோஷ் என்ற இளைஞர் திடீரென அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனையடுத்து கத்தியால் குத்திய சந்தோஷை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைந்திருக்கின்றனர்.

இதற்கிடையில் சந்தோஷ் தாக்கியதில் பலத்த காயமடைந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயமடைந்த இளம்பெண்ணை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இளம் பெண்ணும் சந்தோஷும் உறவினர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு இளம் பெண்ணை தொர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறார். ஆனால் அவர் சந்தோஷை திருமணம் செய்ய மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கொலை செய்யும் நோக்கில் அவர் பணியாற்றும் இடத்துக்கு வந்து கத்தியால் குத்தியுள்ளார். இந்த தகவல் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் மருந்தகத்தில் பட்டபகல் நேரத்தில் இளம் பெண் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பெரும் பரபரப்பையும் ஏறப்படுத்தியுள்ளது.

இதே போல கடந்த2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தூத்துக்குடி அருகே காதலிக்க மறுத்த இளம் பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளியை சேர்ந்தவர் பிரிசிலா, ஏரலில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இவர் தினமும் கடையின் ஆட்டோவில் வேலைக்கு சென்று விட்டு வருவது வழக்கம். இவரிடம் திருமலைபுரத்தை சேர்ந்த கருப்பசாமி காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வேலை முடித்த பிறகு ஆட்டோவில் திருமலையாபுரம் பகுதியில் வந்த போது, ஆட்டோவை மறித்த கருப்பசாமி, அவரை கத்தியால் குத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் இருந்தவர்கள் சத்தம் போட்டதால் கருப்பசாமி தப்பி சென்று விட்டாராம். இதில் காயம் அடைந்த பிரிசிலா தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

Follow Us