மதுரையில் கனமழையால் 165 பயணிகளுடன் தரையிறங்க முடியாமல் தவிக்கும் விமானம்
IndiGo Flight Circles Over Madurai : கன மழை, மேக மூட்டம் காரணமாக மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் 1 மணி நேரமாக இண்டிகோ விமானம் வானில் வட்டமடித்து வருகிறது. மும்பையில் இருந்து 165 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், ஓடுதள பாதையில் தரையிறங்க முடியாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை, செப்டம்பர் 20 : கன மழை, மேக மூட்டம் காரணமாக மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் 1 மணி நேரமாக இண்டிகோ விமானம் வானில் வட்டமடித்து வருகிறது. மும்பையில் இருந்து 165 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், ஓடுதள பாதையில் தரையிறங்க முடியாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில் கனமழையால் 165 பயணிகளுடன் தரையிறங்க முடியாமல் தவிக்கும் விமானம்
சென்னை வானிலை ஆய்வு மையம் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 20, 2026 இன்று மிக மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது. இந்த நிலையில், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செப்டம்பர் 20, 2026 மதியம் முதலே கனமழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க : புதிய கட்சியைத் தொடங்கிய நடிகர் அஜித் ரசிகர்கள் – கொடி அறிமுகம்




இதன் ஒரு பகுதியாக மும்பையில் இருந்து மதுரை வந்த இண்டிகோ விமானம் 1 மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்து வருகிறது. அந்த வகையில் மானாமதுரை அருகே 3 முறைக்கு மேலும், தற்போது மேலூர் அருகே 2 முறைக்கு மேலும் வட்டமடித்து கொண்டிருக்கிறது. அதில் 125 பயணிகள் பயணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக சென்னையில் இருந்து 165 பயணிகளுடன் கோவை நோக்கி வந்த இண்டிகோ விமானம் கோவையில் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக வானில் வட்டமடித்து வந்ததது. இந்த விமானத்தில் அமைச்சர் வன்னி அரசுவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து வானில் வட்டமடித்த விமானம் மதுரையில் தரையிறங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் மதுரையிலும் கனமழை காரணமாக வானில் வட்டமடித்து வந்தது. அமைச்சர் வன்னிஅரசு உட்பட 165 பயணிகளுடன் பயணித்த சென்னை – கோவை இண்டிகோ விமானம் மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வந்தது. அதன் பின்பு கோவையில் தரையிறங்குவதற்கு சாதகமான சூழல் இல்லாததால் மதுரைக்கு திருப்பி விடப்பட்டு அங்கு தரையிறங்கியது. அங்கு பாதுகாப்பாக விமானம் தரையிறங்கியது.
இதையும் படிக்க : சிவகங்கை இரட்டைக் கொலை சம்பவம்.. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி நியமன ஆணை!
ஆனால் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக மும்பையில் இருந்து மதுரை நோக்கி வந்த இண்டிகோ விமானம் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தவித்து வருகிறது. அதில் 165 பயணிகள் வரை இருந்தததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வருகிற செப்டம்பர் 22 வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.