AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன?

Changes From October 1, 2026 | ஒவ்வொரு மாதமும் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும். அந்த வகையில் 2026, அக்டோபர் மாதம் முதல் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 26 Sep 2026 13:16 PM IST

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலை (Gas Cylinder Price), பெட்ரோல் மற்றும் டீசல் விலை (Petrol and Diesel Price), ஆதார் கார்டு (Aadhaar Card), பான் கார்டு (PAN Card) ஆகியவற்றில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும். செப்டம்பர் மாதம் இன்னும் ஒருசில மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில், விரைவில் அக்டோபர் மாதம் தொடங்கள் உள்ளது. இந்த நிலையில் தான், அக்டோபர் மாதம் முதல் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. அந்த வகையில் என்ன என்ன மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அக்டோபர் மாதம் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்

கேஸ் சிலிண்டர் விலை, ஆதார் கார்டு என பல்வேறு மாற்றங்கள் அக்டோபர் முதல் அமலுக்கு வர உள்ளன.

கேஸ் சிலிண்டர் விலை

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கும். இதன் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், அக்டோபர் 01, 2026 அன்று கேஸ் சிலிண்டர் விலையில் முக்கிய மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : வீட்டுக் கடன், தங்க நகைக் கடன் வட்டி உயருகிறதா?.. ஆர்பிஐ கையில் இருக்கும் முக்கிய முடிவு!

கேஸ் சிலிண்டர் முன்பதிவு

கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளவர்கள் அதற்கான ஆதார் அடிப்படையிலான இகேஒய்சி (eKYC – Know Your Customer) மேற்கொள்ள வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இன்னும் சிலர் இதனை முடிக்க நிலையில், செப்டம்பர் 30, 2026-க்கு கேஒய்சி முடிக்காதவர்கள் அக்டோபர் 01, 2026 முதல் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

யுபிஐ-ல் எம்டிஆர் கட்டணம்

தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான இந்திய குடிமக்கள் தங்களது அன்றாட பண பரிவர்த்தனைகளை யுபிஐ (UPI – Unified Payment Interface) மூலம் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில், அக்டோபர் 15, 2026 முதல் யுபிஐ-ல் எம்டிஆர் (MDR – Merchant Discount Rate) கட்டணம் அமலுக்கு வர உள்ளது. ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு வணிக நிறுவனங்கள் செலுத்தும் கட்டணம் இதுவாகும்.

இதையும் படிங்க : சேமிப்புக்கு இன்னுமா 50:30:20 ஃபார்முலா பயன்படுத்துறீங்க.. நிபுணர்கள் கூறும் இந்த சிம்பிள் டிப்ஸ் போதும்!

ஆதார் கார்டு அப்டேட்

குழந்தைகளுக்கு வழங்கப்படும் பால் ஆதார் கார்டில் (Aadhaar Card) அவர்களின் கைரேகை, கண் கருவிழி படலம் ஆகியவை இடம்பெற்றிருக்காது. அவற்றை குழந்தைகள் வளர்ச்சி அடையும்போது பெற்றோர் தான் அப்டேட் செய்ய வேண்டும். இந்த நிலையில் தான், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் பயோமெட்ரிக் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய செப்டம்பர் 30, 2026-ஐ கடைசி தேதியாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.

Follow Us