8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.. சென்னையில் மழைக்கு வாய்ப்பா?
Weather Update: சென்னையில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளையும் சில இடங்களில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும்.
அக்டோபர் 9, 2026: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வெப்பநிலையின் தாக்கமும் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மதுரையில் 36.5, நாமக்கல்லில் 35.6, திருச்சியில் 36.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சென்னையில் மீனம்பாக்கத்தில் 36 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 34.7 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.
8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:
அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்க: வீடு வாடகைக்கு கேட்பது போல டிராமா.. மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு.. தப்பியோடி கில்லாடி பெண் கைது!
திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அக்டோபர் 14ஆம் தேதி வரை தொடரும் மழை:
அக்டோபர் 10-ம் தேதி கோவை மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழையும், தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். அக்டோபர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: தவெக உத்தரவை மீறிய நண்பீஸ்.. கோயிலில் ரீல்ஸ் வெளியிட்ட பெண் நிர்வாகிகள்.. செயல் அலுவலர் போலீசில் புகார்!
அக்டோபர் 13 மற்றும் 14-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் மழை தொடரக்கூடும்.
சென்னையில் இரவு நேர மழைக்கு வாய்ப்பு “
சென்னையில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளையும் சில இடங்களில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும்.