AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திலிருந்து வெளியானது முதல் சிங்கிள் வீடியோ

Thassadiya Video Song From Maa Inti Bangaaram Movie | நடிகை சமந்தா ரூத் பிரபு நடிப்பில் தற்போது தெலுங்கு சினிமாவில் உருவாகி உள்ள படம் மா இண்டி பங்காரம். இந்தப் படத்தில் இருந்து தற்போது முதல் சிங்கிள் வீடியோ வெளியாகி உள்ளது.

சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திலிருந்து வெளியானது முதல் சிங்கிள் வீடியோ
மா இண்டி பங்காரம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Apr 2026 17:24 PM IST

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் பிரபலமாக இருப்பவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவர் தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் பலப் படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து நடிப்பின் உச்சத்தில் இருந்த போது நடிகை சமந்தா ரூத் பிரபுவின் சொந்த வாழ்க்கை மற்றும் உடல் நலத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. அதன்படி தனது முதல் கணவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்தது. உடல் நலக் குறைவு காரணமாக நடிப்பதில் இருந்து விலகி இருந்தது என பல மாற்றங்கள் ஏற்பட்டது. இவர் படங்களில் நடிக்காமல் இருந்தது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இப்படி இருக்கும் நிலையில் நடிகை சமந்தா ரூத் பிரபு மீண்டும் படங்களில் நடிக்கவும் தொடங்கினார் தனது இயக்குநர் ராஜ் என்பவரை காதலித்து இரண்டாவது திருமணமும் செய்துக்கொண்டார். படங்களில் நடிப்பதை தாண்டி தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். தொடர்ந்து தற்போது தான் கதையின் நாயகியாக நடித்து வரும் மா இண்டி பங்காரம் என்ற படத்தையும் அந்தப் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மா இண்டி பங்காரம் படத்திலிருந்து வெளியானது முதல் சிங்கிள் வீடியோ:

அதன்படி இந்த மா இண்டி பங்காரம் படத்தை இயக்குநர் பிவி நந்தினி ரெட்டி இயக்கி வருகிறார். இதில் நடிகை சமந்தா ரூத் பிரபு கதையின் நாயகியாக நடித்து வரும் நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ள நிலையில் படத்தில் இருந்து முதல் பாடல் வீடியோவான தஸ்ஸாதியா என்ற பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் படம் வருகின்ற 15-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… தல அஜித்தின் பர்த்டே ஸ்பெஷல்… ரீ ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் பில்லா படம்!

மா இண்டி பங்காரம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்கும் நடிகர் அதர்வா முரளி? இணையத்தில் வைரலாகும் தகவல்

Follow Us