அப்சரா பென்சிலுக்கும் நட்ராஜ் பென்சிலுக்கும் உள்ள வித்தியாசம் 90ஸ் கிட்ஸ்களுக்கு தான் தெரியும் – தெலுங்கில் வெளியான இந்த 90ஸ் ஏ மிடில் கிளாஸ் பயோபிக் தொடரை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்
90's – A Middle Class Biopic Web Series OTT Update: தெலுங்கு சினிமாவில் உருவாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இணையதள தொடர் 90ஸ் ஏ மிடில் கிளாஸ் பயோபிக். இந்த இணையதள தொடரை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்று தற்போது பார்க்கலாம்.
ஓடிடி கலாச்சாரம் மக்களிடையே அதிகரித்த பிறகு மக்களிடையே தங்கள் தாய் மொழியை தவிர்த்து மற்ற மொழி படங்களைப் பார்க்கும் ஆர்வம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகி மற்ற மொழி ரசிகர்களிடையேயும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து வெள்ளித்திரையில் வெளியாகும் படங்கள் மட்டும் இன்றி இணையதள தொடர்களும் உருவாகி நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தியாவில் இளைஞர்களிடையே அதிக அளவில் கே ட்ராமா தொடர்கள் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த கே ட்ராமா தொடர்களை அதிக அளவில் பார்ப்பதால் மற்ற் மொழி இணையதள தொடர்களையும் ரசிகர்கள் பார்க்க தவறவில்லை. அந்த வகையில் முன்னதாக தெலுங்கு மொழியில் உருவாகி தற்போது ஓடிடியில் காணக் கிடைக்கின்ற 90ஸ் ஏ மிடில் கிளாஸ் பயோபிக் என்ற இணையதள தொடர் குறித்து தற்போது பார்க்கலாம்.
இந்த 90ஸ் ஏ மிடில் கிளாஸ் பயோபிக் என்ற இணையதள தொடர் தெலுங்கும் மொழியில் உருவாகி இருந்தாலும் பான் இந்திய மொழிகளில் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது. மேலும் இந்த தொடரை இயக்குநர் ஆதித்யா ஹசன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்த 90ஸ் ஏ மிடில் கிளாஸ் பயோபிக் தொடரில் நடிகர்கள் சிவாஜி,
வாசுகி ஆனந்த், மௌலி தனுஜ் பிரசாந்த், வசந்திகா மச்சா, ரோஹன் ராய், அனில், சித்தார்த், சினேகல் காமத் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
ஏ மிடில் கிளாஸ் பயோபிக் தொடர் எப்படி இருக்கின்றது?
அதன்படி நடிகர் சிவாஜி இந்த ஏ மிடில் கிளாஸ் பயோபிக் தொடரில் ஒரு கணக்கு வாத்தியாராக இருக்கிறார். இவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். சிறு வயதில் இருந்தே வறுமையில் வாழ்ந்து வந்த சிவாஜி தனது பிள்ளைகள் நன்றாக படித்து பெரிய ஆளக வேண்டும் என்று நினைக்கிறார். அதனால் பலாயிறம் ரூபாய் ஃபீஸ் கட்டி தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்.
Also Read… மணல் மாஃபியாவை எதிர்க்கும் விவசாயி… வெளியானது லெனின் பாண்டியன் படத்தின் ட்ரெய்லர்
இதில் முதல் மகன் மற்றும் மகள் நன்றாக படித்து தனது தந்தையை பெருமைப் படுத்துகிறார்கள். ஆனால் இளைய மகன் மட்டும் சுட்டித்தனத்தில் முதலிலும் படிப்பில் கடைசியாகவும் உள்ளார். மிடில் கிளாஸ் வருமை மற்றும் வாழ்க்கையில் படிப்பை வைத்து முன்னேறிவிட வேண்டும் என்று நினைப்பது என 90ஸ் கிட்களின் பல நினைவுகளை தூண்டும் விதமாக உள்ளது.
மேலும் பள்ளியில் நடைபெறும் காட்சிகள் என காட்டும் பல விசயங்களை 90ஸ் கிட்ஸ்கள் கடந்து இருப்பார்கள். ஒரு நாஸ்டாலியான ஃபீல் குட் இணையதள தொடரை பார்க்க விருப்பம் இருந்த இந்த ஏ மிடில் கிளாஸ் பயோபிக் தொடரை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் மிஸ் செய்யாமல் பாருங்க.
Also Read… மகராசி சீரியல் நடிகை வீட்டில் விசேசம்… வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு



