மணல் மாஃபியாவை எதிர்க்கும் விவசாயி… வெளியானது லெனின் பாண்டியன் படத்தின் ட்ரெய்லர்
Lenin Pandiyan Movie Official Trailer | தமிழ் சினிமாவில் இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் லெனின் பாண்டியன். இந்தப் படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் விவசாயத்தை மையமாக வைத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. மேலும் இந்த மாதிரியான ரூரல் கதைகளை மையமாக வைத்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியகாவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி உள்ள படம் லெனின் பாண்டியன். ரூரல் ட்ராமாவை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் டிடி பாலசந்திரன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்த லெனின் பாண்டியன் படத்தில் நடிகர் கங்கை அமரன் கதையின் நாயகனாக நடித்து உள்ளார். மேலும் நடிகை ரோஜா அவரது மனைவியாக இந்தப் படத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் இணைந்து நடிகர்கள் தர்ஷன் கணேசன், ஷ்ரிதா ராவ், ஜார்ஜ் மேரியன், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் தயாரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




வெளியானது லெனின் பாண்டியன் படத்தின் ட்ரெய்லர்:
அதன்படி இந்த லெனின் பாண்டியன் படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ட்ரெய்லரைப் பார்க்கும் போது விவசாயியாக உள்ள கங்கை அமரன் போராடுகிறார். இதற்காக அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகின்றது. இதனை எதிர்த்து பல சட்ட போராட்டாங்களை நடத்துகிறார். இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… D56: தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி படத்தின் நடிகை இவரா?
இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Delighted to share the trailer of #LeninPandiyan.
Extra special for me to see Appa @gangaiamaren in such an important role in this one. Wishing the entire team a grand success – looking forward to watching it on the big screen soon 😊
#LeninPandiyanTrailer :…— venkat prabhu (@vp_offl) April 15, 2026
Also Read… ஆண் குழந்தைக்கு அப்பாவானார் பிக்பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி – வைரலாகும் போட்டோ