AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Dhanush: அந்த நடிகைக்கு பிறகு.. மமிதா பைஜூவின் நடிப்பை பார்த்து வியந்தேன் – தனுஷ் பேச்சு!

Dhanush Praises Mamitha Baijus Performance: நடிகர் தனுஷின் நடிப்பில் தமிழில் வெளியாகி தயாராகியுள்ள திரைப்படம்தான் கர. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று 2026 ஏப்ரல் 19ம் தேதியில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய தனுஷ், நடிகை மமிதா பைஜூவின் நடிப்பை கண்டு வியந்ததாக தெரிவித்துள்ளார்.

Dhanush: அந்த நடிகைக்கு பிறகு.. மமிதா பைஜூவின் நடிப்பை பார்த்து வியந்தேன் – தனுஷ் பேச்சு!
தனுஷ் மற்றும் மமிதா பைஜுImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 20 Apr 2026 15:21 PM IST

இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் (Vignesh Raja) இயக்கத்தில் தமிழில் உருவாகியுள்ள திரில்லர் கதைக்களம் கொண்ட படம்தான் கர (Kara Movie). இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் (Dhanush) லீட் நாயகனாக நடிக்க, நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) லீட் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், இதில் தனுஷ் கரசாமி என்ற வேடத்தில் நடித்துள்ளார். இப்படமானது ஆரம்பத்தில் டி54 (D54) என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பிறகு படத்தின் டைட்டில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் தனுஷ் ஒரு திருடனாக நடித்துள்ளார். இப்படமானது வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இசையமைத்துள்ள நிலையில், வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது.

இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி, நேற்று 2026 ஏப்ரல் 19ம் தேதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியில் வெற்றிமாறன், மாரி செல்வராஜ் போன்றவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய தனுஷ், நடிகை மமிதா பைஜூவின் நடிப்பை புகழ்ந்துள்ளார்.

இதையும் படிங்க: தனுஷ் நடிப்பை ஆ…னு பார்த்து இருக்கேன் – நடிகை மமிதா பைஜூ

நடிகை மமிதா பைஜூவின் நடிப்பை புகழ்ந்து பேசிய தனுஷ்:

அந்த மேடையில் தனுஷ் பேசுகையில், “மமிதா பைஜூ இவ்வளவு இளம் வயதில் உங்களின் நடிப்பு உண்மையிலேயே அபாரமானது. நித்யா மேனனுக்கு பிறகு, உங்களின் நடிப்பைத்தான் நான் பார்த்து வியந்தேன். இந்த கர படத்தில் உங்களின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது” என அதில் பேசியுள்ளார். மேலும் இந்த கர படமானது இன்டர்நெஷனல் அளவிற்கு வெற்றி பெறும் என அவர் தெரிவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய் – சங்கீதா விவகாரத்து வழக்கு.. விசாரணை தொடங்கிய சில நிமிடங்களில் நீதிபதி திடீர் உத்தரவு!

நடிகை மமிதா பைஜூவை புகழ்ந்து தனுஷ் பேசியது தொடர்பான பதிவு:

தனுஷ் இந்த கர திரைப்படத்தில் இதுவரை எந்த படத்திலும் நடித்திடாத ஒரு வித்தியாசமான வேடத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். மேலும் இதில் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் மற்றும் ஜெயராம் போன்றவர்களின் வேடமும் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. இப்படத்தில் தனுஷ் ஒரு பணத்தை கொள்ளையடிக்கும் திருடனாக நடித்திருக்கும் நிலையில், அவர் எதற்காக பணத்தை திருடுகிறார் என்பதை பற்றிய சுவாரஸ்ய கதைக்களத்துடன் இப்படம் உள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us