AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Silambarasan: நாம் இப்ப ஃபுல் வெஜிடேரியன்-ஆ மாறிட்டேன்.. ஹெல்த் அட்வைஸ் சொன்ன சிலம்பரசன்!

Silambarasan Diet Transformation: கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் சிலம்பரசன். இவரின் நடிப்பில் தமிழில் மிகவும் பிரம்மாண்டமாக அரசன் படமானது தயாராகிவருகிறது. அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றில் பேசியிருந்த சிலம்பரசன், ரசிகர்களுக்கு ஹெல்த் அட்வைஸ் கொடுத்துள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

Silambarasan: நாம் இப்ப ஃபுல் வெஜிடேரியன்-ஆ மாறிட்டேன்.. ஹெல்த் அட்வைஸ் சொன்ன சிலம்பரசன்!
சிலம்பரசன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 Apr 2026 18:22 PM IST

நடிகர் சிலம்பரசன் (Silambarasan) தென்னிந்திய சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருகிறார். இவருக்கு தமிழில் அதிக ரசிகர்கள் உள்ள நிலையில், இவரின் படங்களின் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இவர் இறுதியாக தக் லைஃப் என்ற படத்தில் நடித்திருந்த நிலையில், மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதை அடுத்ததாக சிலம்பரசன் தற்போது வெற்றிமாறனின் (Vetrimaaran) இயக்கத்தில் அரசன் (Arasan) படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கில் சில பிரச்சனைகள் நடந்திருந்த நிலையில், பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருவதாக வட்டாரங்கள் கூறுகிறது. இவரின் அரசன் படமானது இந்த 2026ம் ஆண்டின் தீபாவளியை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலில் பேசியிருந்த சிலம்பரசன், தனது ஹெல்த் பழக்கவழக்கம் மற்றும் ரசிகர்களுக்காக சிறப்பான ஹெல்த் அட்வைஸ் கொடுத்துள்ளார். மேலும் தற்போது சிலம்பரசன் முழுவதுமாக வெஜிடேரியனாக மாறிவிட்டதாகவும், வெஜ் உணவுகளை சாப்பிடுவதால் மிகவும், லைட்டாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஹேப்பி நியூஸ் சொன்ன தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் ஜோடி.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

ரசிகர்களுக்கு சிலம்பரசன் சொன்ன ஹெல்த் அட்வைஸ் :

அண்ட் வீடியோவில் பேசிய சிலம்பரசன், “எனக்கு முன்பெல்லாம் பிரியாணி என்றாலே ரொம்ப பிடிக்கும். நல்ல சாப்பிடுவேன். ஆனால் அதுல பிரச்சனை இருக்கிறது. நாம் சாப்பிட்டு செரிக்க கூடிய வயதில் அதையெல்லாம் சாப்பிட்டால் பெரிதாக பிரச்னை ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு வயதிற்கு வந்த பிறகு, சாப்பாட்டின் மீது கவனம் இருக்கவேண்டும். எனக்கு அரிசி சாதம் என்றால் ரொம்பவே பிடிக்கும், அது இல்லாமல் என்னால் சாப்பிட முடியாது. அதை சாப்பிட்டால் சக்கரை அளவு அதிகரிக்கும் என சொல்லும்போது, முதலில் காய்கறி சாப்பிட்டுவிட்டு, அடுத்ததாக சாப்பாடு சாப்பிட்டால் நல்லது, பெரிதாக பாதிப்பு இருக்காது. இவ்வாறு சிறு சிறு விஷயங்ககளை நாம் தெரிந்துகொண்டால் நல்லது.

இதையும் படிங்க: ‘தேசிய விருது உனக்கு வரணும்’.. தாய் கிழவி படத்தை பார்த்து ராதிகாவை பாராட்டிய இயக்குநர் பாரதிராஜா!

இப்போது நான் முழுவதுமாக வெஜ்-ஆக மாறிவிட்டேன். இப்போது சாப்பாட்டிற்கு பெரிதாக எதுவும் இல்லையென்றாலும், நான் சமாளித்துவிடுவேன். நான் வேண்டுமென்றே ஹெல்தியாக இருக்கவேண்டும், உப்பு இல்லாமல் சாப்பிடவேண்டும் என்று நினைத்து சாப்பிட மாட்டேன். நான் நான்வெஜ் உணவுகளை உண்ட பிறகு மிகவும் மெதுவாக இருப்பதுபோல உணர்கிறேன். ஆனால் வெஜ் உணவுகளை சாப்பிடும்போது, எப்போதும் சுறுசுறுப்பாகவும், லைட்டாகவும் இருப்பதாக உணர்கிறேன்” என அதில் சிலம்பரசன் தெரிவித்திருந்தார்.

நடிகர் சிலம்பரசன் வெளியிட்ட போட்டோஷூட் பதிவு:

நடிகர் சிலம்பரசன் தற்போது அரசன் படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறார். இப்படத்தை அடுத்தாக அஷ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் புதிய படத்தில் இணையவுள்ளார். ஆனால் அஸ்வத் மாரிமுத்து, ரஜினிகாந்துடன் தலைவர் 173 படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சிலம்பரசன் அடுத்ததாக யாருடன் படத்தில் இணைகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us