AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சட்டங்களுக்கு நடுவே சத்தமே இல்லாத கூட்டம்.. போட்டியாளர்களை வெளுத்துவாங்கப்போகும் விஜய் சேதுபதி – வைரலாகும் பிக் பாஸ் புரோமோ!

Bigg Boss 10 6th Day: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. தற்போது முதல் வாரத்தின் இறுதியை இந்நிகழ்ச்சியை எட்டியுள்ள நிலையில், விஜய் சேதுபதி நிகழ்ச்சியில் கலந்துகொள்வார். இந்த வாரத்தில் ஆட்சியை கலைத்தது முதல் சத்தமே இல்லாம இருக்கும் கூட்டம் போன்றவற்றை விஜய் சேதுபதி கேள்வி எழுப்பும் விதமாக புரோமோ வெளியாகியுள்ளது.

சட்டங்களுக்கு நடுவே சத்தமே இல்லாத கூட்டம்.. போட்டியாளர்களை வெளுத்துவாங்கப்போகும் விஜய் சேதுபதி – வைரலாகும் பிக் பாஸ் புரோமோ!
பிக் பாஸ் புரோமோImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 12 Sep 2026 16:05 PM IST

கோலிவுட் சினிமாவில் நாயகனாக இருந்துபவருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவர் சின்னத்திரையில் தொகுத்துவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் (Bigg Boss). கடந்த 2017ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டுவரை வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகனின் கமல்ஹாசன் தொகுத்துவந்த நிலையில், பின் அதிலிருந்து அவர் விலகினார். பின் பிக் பாஸ் சீசன் 8 முதல் விஜய் சேதுபதி தொகுக்க தொடங்கியிருந்தார். அந்த விதத்தில் 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தொடங்கிய நிலையில், டுவிஸ்டுக்கும் மேல் டுவிஸ்ட்டாக இந்த நிகழ்ச்சியானது இருந்துவருகிறது. இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், முதல் நாளையே 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். பின் 19 போட்டியாளர்களுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது தொடங்கிய முதல் வாரத்தில் பல விஷயங்கள் நடந்துள்ளது.

அதிலும் குறிப்பாக பிளாக் பாண்டி வெளியேறிய நிலையில், 4வது நாளிலே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக காமன் மேன் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மணிவண்ணன் போட்டியாளராக நுழைந்துள்ளார். அந்த விதத்தில் இன்று (12/09/2026) வார இறுதியான நிலையில், இன்று விஜய் சேதுபதி கலந்துகொள்வார். இந்நிலையில் இந்த வாரத்திற்கான ரோஸ்ட் என்ன என்பது குறித்த ரசிகர்கள் ஆர்வத்துடன் இருகிறார்கள்.

இதையும் படிங்க: மனமா படையல் தயாராகிட்டு இருக்கு… சிவகார்த்திகேயனின் சேயோன் பட 2வது ஷெட்யூல் ஷூட்டிங் நிறைவு!

பிக் பாஸ் சீசன் 10 6வது நாளில் முதல் புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த பதிவில் விஜய் சேதுபதி, இந்த வீட்டிற்குள் பதவி கொடுத்ததும் அதற்கான வாக்கை அந்த வீட்டின் தலைவர் கொடுத்திருந்தார். அதை நிறைவேற்றாமல் வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சாத்விகா, தலைவர் பதவியிலிருந்தே விலகிவிட்டார். மேலும் எதிர் அணி தளையவர் வினோத் பி[அப்பாவு தலைவராக இந்த வாரத்தை ஈடுகட்டிவரும் நிலையில், வரும் மத்தை செய்யவில்லை. இவ்வளவு பிரசனைகளுக்கும் நிம்டிவி சத்தமே இல்லாத கூட்டத்தை எழுப்பிவிடலாமா? என இந்த புரோமோவில் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: துருவ் விக்ரமின் 4வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது? – வெளியான அப்டேட் இதோ!

பிக் பாஸ் வீட்டில் ஜன நாயக அறை:

இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது அரசியல் கான்செப்டை மையமாக வைத்து நடத்தப்பட்டுவருகிறது. டெமாக்ரஸி ரூம் என்ற ஒன்று உள்ளது. அதில் பிக் பாஸ் வீட்டிற்கான திட்டங்கள் மற்றும் அரசியல் வாக்குகளும் நடத்தப்படும். ஆளும் அணி மற்றும் எதிர் அணி என இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். மேலும் முதல் வாரத்தின் கேப்டனாக சாத்விகா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவர் பதவி விலகிவிட்டார். இதனால் வினோத் பாபு தலைவராக இந்த வீட்டை வழிநடத்துகிறார். இந்த வாரத்திற்கான நாமினேஷனில் முனியம்மா, தான்யா மற்றும் சான்வி வேலு என மூவர் உள்ளனர். இதில் ஒருவர் வெளியேற்றப்படுவார் எனகூறப்படுகிறது.

Follow Us