செங்கல்பட்டு இளைஞர் கொலை சம்பவம்.. 6 பேரை தட்டி தூக்கிய தனிப்படை போலீசார்..!
Chengalpattu Young Man Murder 6 Arrested : செங்கல்பட்டு மாவட்டத்தில் முன் விரோதம் காரணமாக இளைஞர் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் கும்பலை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
செங்கல்பட்டு மாவட்டத்தில் முன் விரோதத்தில் இளைஞரை கொலை செய்த 6 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் வீர முத்துகிருஷ்ணன் ( 26 வயது). இவர், அந்த பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்தார். இவர் மீது கொலை வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், இது தொடர்பாக நீதிமன்றத்தில் தினந்தோறும் ஆஜராகி கையெழுத்துட்டு வருகிறார். அதன்படி, நேற்று வழக்கம்போல நீதிமன்றத்தில் ஆஜரைகி கையெழுத்திட்டு விட்டு வீர முத்துகிருஷ்ணன் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அவரை மர்ம கும்பல் வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்வது. இந்த சம்பவம் தொடர்பாக, 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டு நான் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இளைஞர் கொலையில் 6 பேர் கும்பல் கைது
இதில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக நிதீஷ் குமார் ( 20 வயது), சூர்யா ( 19 வயது), ஜெயபால் ( 20 வயது), மற்றொரு சூர்யா ( 20 வயது), பரத் ( 22 வயது) ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீர முத்துகிருஷ்ணனுக்கும் சிங்கப்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: காதல் வலையில் பெண் காவலர்.. கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட ஆண் காவலர்.. சென்னையில் பரபரப்பு!




கொலை சம்பவத்தின் பின்னணி
இதில், இளைஞர் ஆகாசை, வீர முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் வெட்டி கொலை செய்துள்ளனர். இதற்கு, பலி வாங்கும் நோக்கில் வீர முத்துகிருஷ்ணனை கொலை செய்வதற்கு ஆகாஷ் தரப்பினர் திட்டமிட்டுள்ளனர். அதன் படி, சம்பவத்தன்று, நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு விட்டு வைரமுத்து கிருஷ்ணன் திருச்சி- சென்னை பிரதான சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தனது பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்று உள்ளார்.
இரு பைக்கில் வந்த கும்பல் வெறிச்செயல்
அங்கு 2 இருசக்கர வாகனங்களில் வந்து 6 பேர் கும்பல் வீர முத்துகிருஷ்ணனை வழிமறித்து கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் அடிப்படையில் உடனடியாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வந்த நிலையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சொத்தை ஆசிரமத்துக்கு எழுதி வைப்பதாக மிரட்டல்.. தந்தையை கொன்று மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய மனைவி-மகன்.. சென்னையில் பயங்கரம்!