காதல் வலையில் பெண் காவலர்.. கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட ஆண் காவலர்.. சென்னையில் பரபரப்பு!
Female Police Complaint Against Police : சென்னையில் தன்னை காதலித்து திருமணம் செய்து ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கிவிட்டு அதனை கலைத்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த காவலர் மீது நடவடிக்கை கோரி பெண் காவல் புகார் அளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 24 வயது இளம் பெண். இவர், சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது, இவர் தேனாம்பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக, அந்த பகுதியில் உள்ள புதுப்பேட்டையில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். இந்த நிலையில், இந்த பெண் காவலருக்கும், உடன் பணி புரியும் ஆண் காவலர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும், ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நெருங்கி பழகியதுடன் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். அப்போது, போலீஸ்காரர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண் காவலருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
ஒரே வீட்டில் வசித்து வந்த இரு காவலர்கள்
இதில், அந்த பெண் காவலர் தனக்கு கணவராக போகிறார் என்ற எண்ணத்தில் அவரது ஆசைக்கு இணங்கி உள்ளார். அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளாக இவர்களின் காதல் வாழ்க்கை உல்லாசத்துடன் கடந்துள்ளது. தொடர்ந்து, இருவரின் காதல் விவகாரம் அவர்களின் குடும்பத்திற்கு தெரிய வந்த நிலையில், இரு விட்டாலும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதில், ஆண் காவலரின் குடும்பத்தினர் ஒரு படி மேலே சென்று திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதனிடையே, அந்த பெண் காவலர் திடீரென கர்ப்பம் அடைந்தார்.
மேலும் படிக்க: பூட்டிய வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்.. 1.5 கோடி நகை-பணம் சுருட்டல்.. சிவகங்கையை உலுக்கிய துணிகர கொள்ளை!




பெண் போலீசின் கர்ப்பத்தை கலைத்த காவலர்
இந்த நிலையில், கர்ப்பத்தை கலைக்குமாறு அந்த ஆண் காவலர் கூறி, தனியார் அழைத்து சென்று சிகிச்சை மேற்கொண்டு கருவை கலைத்துள்ளார். இதை தொடர்ந்து, அந்த காவலர், பெண் காவலரை திருமணம் செய்ய திடீரென மறுப்பு தெரிவித்து, அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். அத்துடன், விடுமுறை எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு, வேறொரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்
இந்த விவரங்களை அறிந்த பெண் காவலர் கடும் அதிர்ச்சி அடைந்ததுடன், தனது வாழ்க்கையை சீரழித்த காவலர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனுடன் வாழ்ந்த 3 ஆண்டு வாழ்க்கைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று சென்னை எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண் காவலர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: நண்பரை நம்பி ரஷ்யா சென்ற விருதுநகர் இளைஞர்.. கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்ப்பு.. பெற்றோர் பரிதவிப்பு!