AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நாமக்கல் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து.. சம்பவ இடத்தில் பறிபோன 3 உயிர்கள்.. பெரும் சோகம்!

Namakkal Car Accident 3 Dies : நாமக்கல் மாவட்டத்தில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கொடூர விபத்தில் அதில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாமக்கல் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து.. சம்பவ இடத்தில் பறிபோன 3 உயிர்கள்.. பெரும் சோகம்!
விபத்தில் சிக்கி கார்கள்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 16 Sep 2026 11:40 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி அருகே உள்ள மொலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பெங்களூரில் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களது காரில் பெங்களூரில் இருந்து சொந்த ஊரான கரூருக்கு சென்று கொண்டிருந்தனர். இவர்களது கார் சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திருச்செந்தூர் சென்று விட்டு பெங்களூர் நோக்கி மற்றொரு குடும்பத்தினர் எதிர்புற சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்தில் உயிரிழந்த 3 பேர்

இந்த விபத்தில் பள்ளப்பட்டியை சேர்ந்த ஆர்வம் ஓட்டுநரான கார்த்திக் குமார் ( 35 வயது), அவரது தந்தை செல்வராஜ் ( 60 வயது), அவரது தாய் காந்திமதி ( 55 வயது) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். எதிர்புறமாக சாலையில் காரை ஓட்டி வந்த பெங்களூரை சேர்ந்த கிசான் கெளடா (19 வயது) என்பவர் பலத்த காயமடைந்தார். அந்த வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: காதல் வலையில் பெண் காவலர்.. கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட ஆண் காவலர்.. சென்னையில் பரபரப்பு!

அப்பளம் போல நொறுங்கிய இரு கார்கள்

விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த நல்லிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி உயிர் இழந்த 3 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர விபத்தால், இரு கார்களும் அப்பளம் போல நொறுங்கியது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே, விபத்துக்குள்ளான கார்களை மீட்டு, போக்குவரத்தை போலீசார் சரி செய்தனர்.

நல்லிபாளையம் போலீசார் விசாரணை

தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், திருச்செந்தூரில் இருந்து, பெங்களூர் நோக்கி சென்ற ஜீப் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பு கட்டையை உடைத்து கொண்டு, எதிரே கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சொத்தை ஆசிரமத்துக்கு எழுதி வைப்பதாக மிரட்டல்.. தந்தையை கொன்று மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய மனைவி-மகன்.. சென்னையில் பயங்கரம்!

Follow Us