இது ராமயுகத்தின் உதயம்… அதிகாலையிலேயே வெளியானது ராமாயணா படத்தின் ட்ரெய்லர்
Namit Malhotras Ramayana Movie Tamil Trailer Out Now | பாலிவுட் சினிமாவில் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி உள்ள ராமாயணா படத்தின் ட்ரெய்லர் இன்று அதிகாலை வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
பாலிவுட் சினிமாவில் தற்போது மிகவும் பிரமாண்டமான பொருட் செலவில் தற்போது உருவாகி உள்ளது ராமாயணா படம். இந்தப் படத்தை மக்களிடையே மிகவும் பிரபலமான ஆன்மீக நாவலான ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இந்தப் படத்தினை இயக்குநர் நித்தேஷ் திவாரி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் பல மாதங்களாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தினை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று 30-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு அதிகாளை 4 மணிக்கே வெளியிட்டுள்ளது. அந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மேலும் இந்தப் படத்தில் பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ரன்பீர் கபூர் ராமனாக நடித்து உள்ள நிலையில் நடிகர் யாஷ் ராவணனாக நடித்து உள்ளார். மேலும் நடிகை சாய் பல்லவி இந்தப் படத்தில் சீதாவாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சன்னி தயோல், அனுபம் கீர், ரவி தூபே, லாரா தத், அருண் கோவில், ரகுல் ப்ரீத் சிங் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.




அதிகாலையிலேயே வெளியானது ராமாயணா படத்தின் ட்ரெய்லர்:
அதன்படி இன்று வெளியான ராமாயணா படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போது இது முன்பு நாம் பார்த்தே அதே கதை என்றாலும் முன்பைவிட மிகவும் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போது ராமாயணா கதைப் பிடித்தவர்கள் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்க்க தவறாதீர்கள். மேலும் இந்த ட்ரெய்லரில் ராமராக ரன்பீர் கபூர் மற்றும் ராவணனாக நடிகர் யாஷ் மிரட்டியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். மேலும் தற்போது ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… அன் ஆர்டினரி மேன் படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்
ராமாயணா படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
The Ramayana Trailer.
This is where the EPIC BEGINS. 🏹Namit Malhotra’s Ramayana
Directed by Nitesh TiwariStarring
Ranbir Kapoor as Rama
Yash as Ravana
Sai Pallavi as Sita
Sunny Deol as Hanuman
Music by Hans Zimmer & A.R. Rahman
Globally Distributed by Sony Pictures…— The World Of Ramayana (@WorldOfRamayana) July 29, 2026
Also Read… முதல்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்தது சியான் 63 படக்குழு