AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிரபல சின்னத்திரை நடிகர் மரணம் – சோகத்தில் ரசிகர்கள்

திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் வி.சி. ஜெயமணி. இவர் ஜூலை 28, 2026 நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 76. இவர் சிங்கம், லக்கி மேன் போன்ற 250 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

பிரபல சின்னத்திரை நடிகர் மரணம் – சோகத்தில் ரசிகர்கள்
சின்னத்திரை நடிகர் வி.சி.ஜெயமணி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 29 Jul 2026 08:47 AM IST

திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் வி.சி. ஜெயமணி. இவர் ஜூலை 28, 2026 நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 76. இவர் சிங்கம், லக்கி மேன் போன்ற 250 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். குறிப்பாக திருமதி செல்வம், சிறகடிக்க ஆசை உள்ளிட்ட தொடர்களிலும் அவர் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் படித்துள்ளார். இதனையடுத்து அவரது மறைவுக்கு அவருடன் நடித்த நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல சின்னத்திரை நடிகர் மரணம்

பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் வி.சி ஜெயமணி முஸ்தபா, லக்கி மேன், சிங்கம் என 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட சீரியல்களை அவர் இயக்கியுள்ளார். இவர் தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் டப்பிங் யூனியனிலும செயல்பட்டு வந்தார்.

இதையும் படிக்க : சின்னத்திரை சீரியலில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் யார் யார் தெரியுமா?

இருப்பினும் ரசிகர்களிடையே இவரை பிரபலப்படுத்தியது திருமதி செல்வம் தொடர் தான். அந்த தொடரில் அவர் பொறுப்பற்ற அப்பாவாக நகைச்சுவை கலந்த வேடத்தில் நடித்து ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். திருமுருகன் இயக்கத்தில் மெகா ஹிட் தொடரான மெட்டி ஒலி தொடரிலும் முக்கியமான குணச்சித்திர வேடத்தை அவர் ஏற்றிருந்தார். சமீபத்தில் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை தொடரிலும், சன் டிவியில் ஒளிபரப்பாகும் புது வசந்தம் தொடரிலும் முக்கிய வேடங்களில் நடித்து வந்தார்.

சின்னத்திரை நடிகர் ஷியாமின் இரங்கல் பதிவு

 

View this post on Instagram

 

A post shared by Nathanshyam (@nathanshyam13)

இதையும் படிக்க : என்ன விஜய் டிவி ரசிகர்களே தயாரா? விரைவில் வரும் புது தொடர்.. அட இந்த சீரியலின் ரீமேக்கா?

குறிப்பாக சிறகடிக்க ஆசை தொடர் நீண்ட இடைவேளைக்கு பிறகு அவரது நடிப்பில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இவர் பல மேடை நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். கடைசியாக ஆர்ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள சொர்க்கவாசல் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். நடிகர், இயக்குனரை தாண்டி, இவர் நடிகர் சங்கம் மற்றும் டப்பிங் யூனியன் உறுப்பினராகவும் இருந்துள்ளார். அதேபோல் ஜெயமணியின் மனைவி மாலதி டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக இருக்கிறார். இவர்களின் மகள் நந்தினி டீச்சராக வேலை பார்த்து வருகிறார்.

பிரபல சின்னத்திரை தொடர்களில் தனது சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஜெயமணி. அவரது திடீர் மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் இணைந்து நடித்த சக நடிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow Us