லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கியது
DC Movie Ticket Booking Open Now | இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகம் ஆக உள்ள படம் டிசி. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவை படக்குழு தொடங்கி உள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் பெரும்பாலும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி இறுதியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்து எந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகிறார். அதன்படி அவர் நாயகனாக அறிமுகம் ஆக உள்ள படம் டிசி.




லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கியது:
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்த டிசி படத்தில் நடிகர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ள நிலையில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். படம் வருகின்ற 07-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவை தொடங்கி உள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… திரிஷாவா இல்ல நயன்தாராவா? கார்த்தி – மோகன் ராஜாவுடன் இணையும் பட நடிகை இவரா?
டிசி படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
2 Hours 23 Minutes of Explosive Entertainment, Locked and Loaded. 🔥
Book Your Tickets Now! ❤️🔥
🎟️ https://t.co/waMS0KHZVH
🎟️ https://t.co/TqpTWqUqnJ#DC releasing worldwide August 7th.@Dir_Lokesh @ArunMatheswaran @anirudhofficial #WamiqaGabbi @isanjkayy @mukesh_DOP… pic.twitter.com/DovrkA2v6K— Sun Pictures (@sunpictures) August 5, 2026
Also Read… அர்ஜுன் தாஸ் – அதிதி சங்கரின் ஒன்ஸ் மோர் படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ