AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெப்பநிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்.. மத்திய சுகாதார துறை வெளியிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை..

Heat Wave Warning: வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்க, மாநிலங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார செயலாளர் வலியுறுத்தியுள்ளார். உச்ச கோடை காலத்திற்கு முன்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வெப்பநிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்.. மத்திய சுகாதார துறை வெளியிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Apr 2026 18:28 PM IST

ஏப்ரல் 28, 2026: இந்தியா முழுவதும் ஏப்ரல் முதல் ஜூன் 2026 வரை இயல்பை விட அதிகமான வெப்பஅலை (Heatwave) நிலவ வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னறிவிப்பின் அடிப்படையில், மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. மத்திய சுகாதார செயலாளர் புன்யா சலீலா ஸ்ரீவஸ்தவா, தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், அனைத்து மருத்துவமனைகளிலும் ‘Heat Stroke Management Units’ அமைப்பதை அவசரமாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் வெப்ப அலையின் பாதிப்பு:

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, கிழக்கு, மத்திய, வடமேற்கு இந்தியா மற்றும் தென்கிழக்கு தீபகற்ப பகுதிகளில் வெப்பஅலை நாட்கள் அதிகமாக இருக்கும். குறிப்பாக ஒடிஷா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேச கடலோர பகுதிகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் என கூறப்பட்டுள்ளது.

Also Read: 106 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை.. அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரிக்கை..

இதையடுத்து, மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்:

  • அனைத்து மருத்துவமனைகளிலும் வெப்பஅடி சிகிச்சை பிரிவுகள் அமைத்தல்
  • ஆம்புலன்ஸ் சேவைகளை தயாராக வைத்தல்
  • வெப்பஅலை எச்சரிக்கைகளை உடனுக்குடன் பொதுமக்களுக்கு தெரிவிப்பு
  • ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளம் மூலம் வெப்ப அலை சம்பவங்களை நேரடியாக பதிவு செய்தல்

மேலும், உச்ச வெப்ப காலங்களில் விரைவான நடவடிக்கைக்காக துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தல்:

வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்க, மாநிலங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார செயலாளர் வலியுறுத்தியுள்ளார். உச்ச கோடை காலத்திற்கு முன்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை:

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். அதிகபட்சமாக, கடந்த 24 மணி நேரத்தில் வேலூரில் 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சியில் 40.3 டிகிரி செல்சியஸ், மதுரையில் 40.4 டிகிரி செல்சியஸ், கரூரில் 41 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Follow Us