AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பேசில் ஜோசஃப் – அல்லு அர்ஜுனின் படம் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்

Basil Joseph and Allu Arjun Movie Update: மலையாள சினிமாவில் பிரபல இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பேசில் ஜோசஃப். இவர் அடுத்ததாக நடிகர் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து பணியாற்ற உள்ள படங்கள் குறித்து அப்டேட் வைரலாகி வருகின்றது.

பேசில் ஜோசஃப் – அல்லு அர்ஜுனின் படம் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்
அல்லு அர்ஜுன் பேசில் ஜோசஃப்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Apr 2026 18:48 PM IST

மலையாள சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றும் போதே பலப் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் பேசில் ஜோசஃப். அதனைத் தொடர்ந்து இயக்குநராக படங்களை இயக்கி மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் குறிப்பாக நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் இயக்குநர் பேசில் ஜொசஃப் இயக்கத்தில் வெளியான மின்னல் முரளி படம் உலக அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து வெளியாகி இருந்ததால் உலக அளவில் பல விருதுகளையும் இயக்குநர் பேசில் ஜோசஃபிற்கு பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து படங்களை இயக்குவதில் இருந்து சற்று ஓய்வு எடுத்த பேசில் ஜோசஃப் முலு நேரமாக நடிகராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடக்கத்து.

தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தற்போது தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். அதன்படி நடிகர் பேசில் ஜோசஃப் முன்னதாக தமிழ் சினிமாவில் பராசக்தி படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்து இருந்த நிலையில் தற்போது ராவடி என்ற படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தலைவர் 173 படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் விழா ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பேசில் ஜோசஃப் – அல்லு அர்ஜுனின் படம் எப்போது தொடங்கும்?

அதன்படி சமீபத்தில் பேசிய போது தான் காமிக் புத்தகங்களின் தீவிர ரசிகர் என்று பேசில் ஜோசப் குறிப்பிட்டார். மின்னல் முரளி 2 குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, ​​அவர் தெளிவான பதிலை அளிக்கவில்லை. அந்தக்கதையில் சில மாற்றங்களைச் செய்து, அதை அல்லு அர்ஜுனுக்காகத் தழுவி உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது, ​​அல்லு அர்ஜுன் ராக்கா படத்தில் பணியாற்றி வருகிறார். அதைத் தொடர்ந்து, AA 23 திரைப்படம் அவருக்கு வரிசையில் உள்ளது; அப்பணி நிறைவடைந்ததும், பேசில் ஜோசப்புடனான திரைப்படம் அடுத்தகட்டத்திற்கு நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Dhanush: மகன் யாத்ரா ஹீரோவாக நடிக்கவுள்ளாரா? கேள்விகளுக்கு தனுஷ் கொடுத்த பதில்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அழகு முக்கியம் இல்லை… அன்புதான் முக்கியம்… சமூக கருத்துடன் வெளியான ஹேப்பி ராஜ் படத்தின் ஓடிடி விமர்சனம் இதோ!

Follow Us